V2025

செய்தி

'அமெரிக்க பிரஜாவுரிமை விவகாரம்; முடிந்தால் ஆவணத்தை சமர்ப்பியுங்கள்' - கோட்டாவிற்கு மங்களவின் சவால்!

கோத்தபாய ராஜபக்ச தமது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதை நிரூபிக்க, உரிய ஆவணத்தை சமர்ப்பிக்கமுடியுமா என்று அமைச்சர் மங்கள சமரவீர சவால் விடுத்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிட்டமைக்கான எவ்வித ஆவணங்களும் இல்லை என்று அவர் இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், அமெரிக்க குடியுரிமையை கோத்தபாய ராஜபக்ச கைவிட்டமைக்கான சான்றிதழை, பொதுஜன பொரமுன கட்சியால் சமர்பிக்கமுடியுமா? என்று அவர் சவால் விடுத்தார்.

மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடன்படிக்கை தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த சவாலை விடுத்தார்.

Comment (0) Hits: 16

டெலோ, ப்ளொட் அமைப்புக்கள் சஜித்துக்கு ஆதரவு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA)  பிரதான கூட்டணிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்கத் தீர்மானித்ததன் பின்னர் அக்கூட்டமைப்பின் ஏனைய இரண்டு கூட்டணிக் கட்சிகளான டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ப்ளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் ஆகியோரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து நடாத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் அவர்களும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு இவ்விரு அமைப்புக்களினதும் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இச்சந்திப்பு பிரதமரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேசிய பிரச்சினைக்குரிய தீர்வு தொடர்பில் ஐ.தே.கட்சியின் பிரதி தலைவரான சஜித் பிரேமதாசாவின் வேலைத்திட்டம் தொடர்பில் இங்கு பேசப்பட்டுள்ளதோடு, சஜித் பிரேமதாசாவினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் விரிவான முறையில் பிரதமரினால் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.  இந்தச் சந்திப்பின் பின்னர் குறித்த இரண்டு அமைப்புக்களின் தலைவர்களும் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிய வருவதோடு, இத்தீர்மானத்தை அடுத்த இரண்டு தினங்களுக்குள் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதாக டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அனேக தமிழ் அரசியல்வாதிகளுக்கு  பிரச்சினைக்குரிய விடயமாக இருப்பது சஜித் பிரேமதாசாவின் அரசியல் நிலைப்பாடு தொடர்பில் அவர்களுக்குள் இருக்கும் தெளிவின்மையே என்றும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலையீட்டினால் அந்த சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதற்காக தற்போது பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
Comment (0) Hits: 14

சந்திரிகாவின் பதவி நீக்கம் ஒத்திவைப்பு! (காணொளி)

ஸ்ரீ.ல.சு.கட்சியின் முன்னாள் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவினால் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் வழங்குதல் மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளல் போன்றவற்றை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரையில் பிற்போடுவதற்கு நேற்று முன்தினம் (5) கூடிய அக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

அத்துடன் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டாரங்களில் நேற்று முன்தினம் (5) இடம்பெற்ற “நாம் ஸ்ரீலங்கா” மாநாட்டில் கலந்து கொண்ட ஸ்ரீ.ல.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு பதிலாக, அவர்களுக்கு பதிலாக ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்குவதற்காக பதில் அமைப்பாளர்களை நியமிப்பதற்கும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

கட்சியின் பதில் தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாசாவின் தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த செயற்குழு கூட்டத்தின் போதே, இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இந்த செயற்குழு கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவும் கலந்துகொண்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை கட்சி ஆலோசகா் பதவியிலிருந்து நீக்குதல் மற்றும் அவரது கட்சி அங்கத்துவத்தை இடைநிறுத்துவது தொடர்பில், பேச்சுக்கள் அடிபட்டிருந்த நிலையில் மத்திய செயற்குழுவில் இது தொடர்பாக பேசப்பட்ட போதிலும் எந்தவித தீர்மானங்களும் இவ்விடயமாக மேற்கொள்ளப்படவில்லை.

Comment (0) Hits: 13

'அது விடுதலைப் புலிகளின் செயற்பாடு அல்ல என்பதை அறிந்திருந்தேன்' - கோத்தாபய!

மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொலை செய்யப்பட்டபோதே அது விடுதலைப் புலிகளின் செயற்பாடு அல்ல என்பதை தாம் அறிந்திருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிலாபம் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாங்கள் தீவிரவாதிகளிடம் இருந்து இந்த நாட்டை மீட்டெடுத்தோம். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் 30 வருடகால போரினை முடிக்க முடியாதென்றும், இராணுவ ரீதியில் அதனை முடிவுக்கு கொண்டுவர முடியாது எனவும் வெளிநாட்டுத் தூதரகங்களின் ஆலோசகர்கள் கூறினார்கள்.

எனினும் போரை முடிவுறுத்த இரண்டரை வருடங்களிற்குள் நடவடிக்கை எடுத்தோம். அன்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் என்போரை தீவிரவாதிகளை கண்டுபிடிக்க பயன்படுத்தினோம்.

ஆனால் இந்த அரசாங்கம் அவர்களை அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்துகிறது. என்னையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாகவே கைது செய்ய முயற்சி செய்ததாக முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ கூறினார்.

மட்டக்களப்பில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்டபோது எமது முன்னாள் புலனாய்வு அதிகாரி விசேடமாக அமைச்சில் பணிபுரிந்த அந்த அதிகாரி என்னுடன் தொடர்புகொண்டு இந்த படுகொலையை நிச்சயமாக விடுதலைப் புலிகள் செய்திருக்காது என்றும் இனவாதிகளின் செயற்பாடாக இருக்கலாம் எனவும் கூறினார்.

உடனே இரகசிய பொலிஸாரிடம் கூறும்படி நான் கூறினேன். என்ன நடந்தது? இறுதியில் இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் அந்தப் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட துப்பாக்கி சஹ்ரானிடமிருந்து மீட்கப்பட்டது.

ஆகவே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்குவோம்” என கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு – வவுனதீவு பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த வருடம் நவம்பர் 29ம் திகதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த படுகொலை இடம்பெற்றதன் பின்னர் இது தமிழீழ விடுதலைப் புலிகளே இதனை செய்திருப்பார்கள் என்று சந்தேகம் வெளியிடப்பட்டதோடு விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி உட்பட இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டனர்.

இதற்கமைய தமிழீழ விடுதலைப் புலிகள் மீளுருவாக ஆரம்பித்துவிட்டதாக எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலுள்ள உறுப்பினர்கள் பலரும் கருத்து வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில், வவுனதீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொலை செய்யப்பட்டபோதே அது விடுதலைப் புலிகளின் செயற்பாடு அல்ல என்பதை தாம் அறிந்திருந்ததாக கோத்தபாய ராஜபக்ச கூறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 21

வாக்களிக்கும்போது புர்கா, நிகாப்பை அகற்ற வேண்டும்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வாக்களிக்க வருகை தரும்போது, புர்கா அல்லது நிகாப் அணியலாம் என தெரிவித்த தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க, வாக்களிப்பு நிலையத்துக்குள் நுழையும்போது அவற்றை அகற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

புர்கா மற்றும் நிகாப் அணிவதை எங்களால் தடை செய்ய முடியாது, ஏனெனில் அது அவர்களின் கலாசாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 

வாக்காளர்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பது அவர்களுக்கு ஒரு வாக்குச் சீட்டு வழங்கப்படுவதற்கு முன்பு அவர்களின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும்.

வாக்களிக்கும்போது வாக்களார் ஒருவர் தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டியது அவசியம். அவரது அடையாளம் அடையாள அட்டையில் முகத்துடன் இணையாக இருக்க வேண்டும். அதற்காக, அவர் முகத்தை மறைத்திருக்கும் நிகாப் மற்றும் புர்கா போன்றவற்றை அகற்ற வேண்டும்.

எனினும், மேற்படி நிபந்தனைகளை கருத்திற்கொள்ளாமல் ஒரு வாக்களார் தனது  நிகாப் மற்றும் புர்கா போன்றவற்றை அகற்றாது வாக்களிப்பதற்கு, வாக்களிப்பு நிலைய தலைமை அதிகாரி அனுமதி வழங்கக்கூடாது எனவும் சமன் சமன் ஸ்ரீ ரத்னாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Comment (0) Hits: 13

'என்னை கொலை செய்யப்போவதாக மகிந்த எச்சரித்துள்ளார்'- சஜின்வாஸ்!(காணொளி)

ஜனாதிபதிவேட்பாளர் சஜித்பிரேமதாசவிற்கு தொடர்ந்தும் ஆதரவளித்தால் தன்னை கொலை செய்யப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  தெரிவித்துள்ளார் என முன்னாள் அமைச்சர் சஜின்வாஸ் குணவர்த்தன பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை செய்தியாளர் மாநாட்டில் அவர் உறுதி செய்துள்ளார்.

17 வருடங்களாக நான் மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்காக பணியாற்றினேன் என தெரிவித்துள்ள சஜின்வாஸ் குணவர்த்தனm ஆனால் அவர்கள் எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த பின்னர், என்னை வெளியேற்றினார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் , அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை குறித்த வழக்குகள் இன்னமும் நீதிமன்றத்தில் உள்ளன என  அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்குகளை முன்னைய அரசாங்கமே தாக்கல் செய்தது என தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டாம் என பொதுஜன பெரமுனவில் உள்ள எனது நண்பரான நாடாளுமன்ற உறுப்பினர் அடிக்கடி என்னை கேட்டுக்கொண்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது மனைவிக்கும் இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. இதனை தொடர்ந்து எனது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக நான் பொலிசில் முறைப்பாடு செய்ய தீர்மானித்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவரின் மரணத்தை தீர்மானிக்கும்  அதிகாரம்  அரசியல்வாதிக்கு இல்லை என சஜின்வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

 

Comment (0) Hits: 43

MCC ஒப்பந்தம்; மஹிந்தவுக்கு மங்கள சவால்!

தேர்தல் காலத்தில் ​​அமெரிக்க எதிர்ப்பு பயங்கரவாதத்தை தோற்றுவித்து மக்களை ஏமாற்றாமல் MCC உடன்படிக்கையினால் நாட்டிற்கு பாதகம் ஏற்படுமாயின் அது எத்தகைய பாதிப்பு என வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

 மில்­லே­னியம் சவால் ஒப்­பந்தம் குறித்து நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர வெளி­யிட்­டுள்ள விசேட அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாவது,

அமெரிக்காவுடன் மில்லேனியம் சவால் ஒத்துழைப்பு (MCC) ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதனால் நாட்டுக்குத் பாதகம் ஏற்படும் என குற்றம் சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அதனால் நாட்டுக்கு ஏற்படும் கெடுதல் தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்காமல், அமெரிக்க எதிர்ப்பு பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முயற்சிக்கின்றார். ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில், மக்களை  ஏமாற்றாமல், MCC ஒப்பந்தத்தின் மூலம் நாட்டிற்கோ அல்லது மக்களுக்கோ பாதகம் ஏற்படும் பட்சத்தில் அது தொடர்பில், பொதுமக்களுக்கு தெரியப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பொது முன்னணியின் தலைவர்களுக்கு நான் சவால் விடுக்கிறேன்.

இதற்கு முன்னரான தேர்தல் காலத்தின் போது, அமெரிக்க பீதியை உருவாக்கி சீகிரியா, சிங்கராஜ மற்றும் காலி கோட்டையை அமெரிக்காவிற்கு விற்கப்போவதாக, அப்போதைய எதிர்க்கட்சியினால் பொய் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அந்த பிரச்சாரங்களில் எவ்விதமான உண்மைத் தன்மையும் இல்லை என்பதை மக்கள்  உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

இந்த மில்லேனியம் ஒப்பந்தத்துக்கு கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் தற்போது பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கார்டினல் மில்லேனியம் ஒப்பந்தத்திற்கு எதிரானவர் என்ற செய்தி, போலிப் பிரசாரம் என பேராயர் இல்லம் அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வி அடைவதை தடுப்பதற்காக மத வழிபாட்டுத் தலங்களைப் பயன்படுத்துவதன் மூலம், உண்மைகளை திரிபுபடுத்தி அரசியல் ஆதாயத்துக்காக, மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர் தள்ளப்பட்டுள்ளனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தழுவுவதை தாங்கிக்கொள்ள முடியாமல், இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுவது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும். அத்துடன், மக்களை ஏமாற்றி எப்படியாவது தமது வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதற்கு எதிர்க்கட்சி முயற்சிக்கிறது.

ஜனாதிபதித் தேர்தல் மூலம், நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க குடிமகனை ஜனாதிபதியாக்குவதற்கும் ஒரு அமெரிக்க பிரஜையை முதல் பெண்மணியாக்குவதற்கும் முயற்சிக்கும் திவாலான அரசியல்வாதிகளினாலேயே, நாட்டில் அமெரிக்க எதிர்ப்பு பீதியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது மிகவும் வேடிக்கையானதும் நகைப்புக்குரிய விடயமுமாகும்.

MCC ஒப்பந்தம் சம்பந்தமாக 2002 ஆம் ஆண்டு முதல் முறையாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதன் மூலம் 480 மில்லியன் அமெரிக்க டொலருக்கு சமமான, சுமார் 88,000 மில்லியன் ரூபா நிதி இலங்கைக்கு கிடைகின்றது.

இந்த மானியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக 2005ஆம் ஆண்டு  ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில், MCC மூலம் 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில், அப்போதைய அரசாங்கத்தின் தலைவரான மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரிலேயே, நான் கலந்துகொண்டேன். எவ்வாறாயினும்,  அந்த அரசாங்கத்துக்கு எதிரான தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான ஊழல், பயங்கரவாதம் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகிய குற்றச்சாட்டுகள் காரணமாக MCC மானியத்தை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி வீணானது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ MCC குறித்து மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார். இதேவேளை, இதனால் நாட்டுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் பொருளாதார நன்மைகள் கிடைக்கக் கூடிய இந்த ஒப்பந்தத்தின் ஊடாக, நாட்டுக்கு பாதகம் ஏற்படும் என்று அவர்கள் கூறுவார்களாயின், தேர்தல் காலத்தில் அமெரிக்க எதிர்ப்பு பயங்கரவாதத்தை தோற்றுவித்து மக்களை ஏமாற்றாமல், இது குறித்த விடயங்களை தெளிவுபடுத்துமாறு, எதிர்க்கட்சித் தலைவருக்கு நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது நாட்டின் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் என, பொது முன்னணியைச் சேர்ந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாசாங்கு செய்கின்றனர். இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்துதற்கு முன்னர், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாத்திரம் தனது குற்றச்சாட்டை மட்டுப்படுத்தியுள்ளதுடன், பொதுமக்கள் மத்தியில் பொய்யான அச்சத்தை தோற்றுவிக்கும் பொறுப்பு, எப்போதும் பொய்யை பரப்பும் இரு எம்.பி.க்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளமை நிரூபணமாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமான போக்குவரத்து மற்றும் காணி குறித்த பிரச்சினைகள், இலங்கையினால் அடையாளங் காணப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம், சுமார் 50 இலட்சம் மக்கள் தமது காணிகளுக்குரிய உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடிவதுடன், போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலம், சுமார் 70 மில்லியன் மக்கள் பயனடைவார்கள்.

இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் கீழ், நாட்டின் 07 மாவட்டங்களில் காணப்படும் தனியார் மற்றும் அரச காணிகளை இலகுவில் அடையாளம் காணக்கூடிய வகையில், காணிகள் குறித்த நிலவரைபடம் தயாரிக்கப்படுவதுடன் இதனால், அரச காணிகள் தொடர்பில் ஒரு தனி செயன்முறையை முன்னெடுக்க அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் கிடைகின்றது.

இந்த ஒப்பந்தத்தின் படி, மின்னணு (Electric) காணி பதிவு அலுவலகம் நிறுவப்பட்டு, தற்போது காணி பதிவாளர் அலுவலகங்களில் இருக்கும் அனைத்து உறுதிப்பத்திரங்களும் மின்னணு முறையில் பாதுகாக்கப்பட்டு, அதற்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும்.

பொதுமக்களுக்கு நன்மைபயக்கக் கூடிய இவ்வாறான திட்டங்களினால், நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டை, அறிவார்ந்த மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன்.

MCC ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கான சட்டமொன்று  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே, இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என அந்த ஒப்பந்தத்திலேயே உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை சட்டவரைபின் படி, குறித்த ஒப்பந்தம் வர்த்தமானி செய்யப்படும்போது, ​​அதனால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அந்த சட்ட மசோதாவுக்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுள்ளது.

அமெரிக்காவுடனான மில்லேனியம் சேலஞ்ச் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி  அளித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், அது தொடர்பில் மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவிக்கும் தேசபக்தர்கள் என அழைக்கப்படுபவர்கள், இதனால் நாட்டிற்கும் மக்களுக்கும் ஏதேனும் பாதகமான விளைவுகள் இருப்பின்,  உடனடியாக அம்பலப்படுத்த வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.

மில்லேனியம் செலேன்சஞ் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் வரைவின் நகல் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 21

சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தார் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம்!

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

சிறைகளில் வாழும் தண்டனை பெற்ற அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு மற்றும் கிழக்கில் காணி விடுவிப்பு மற்றும் காணாமல் போனரது உறவினர்களுக்கு மாதாந்தம் 50,000 ரூபா நிவாரணம் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கை களை  முன்வைத்தே  ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இன்று காலை சுமார் ஒரு மணித்தியாலம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாலும், அதனைத் தொடர்ந்து அலரி மாளிகைக்கு முன்னாலும் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதன் போது தனது கோரிக்கைகளை அடங்கிய மகஜரையும் அவர் ஜனாதிபதி செயலகத்திலும் அலரி மாளிகையிலும் கையளித்ததாக அவரது பிரத்தியேக செயலாளர் தெரிவித்தார்.

Comment (0) Hits: 21

யாழ் படையினரால் 'பெரியகுளம்' குளம் புனரமைப்பு!

யாழ் குடாநாட்டில் சிவில் மற்றும் இராணுவத்தினரின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்திகொள்ளும் நிமித்தம் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய வழிக்காட்டலுக்கமைய 10 ஆவது இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணி மற்றும் 5 ஆவது பொறியியலாளர் சேவை படையணியின் படையினரால் வடக்கு அரலி பிரதேசத்தில் உள்ள 'பெரியகுளம்' குளம் புனரமைக்கப்பட்டு பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய இந்த குளமானது பிரதம அதிதியான இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் 4 ஆம் திகதி திங்கட்கிழமை திறந்து வைத்து விவசாய மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்த பெரிய புனரமைப்பு திட்டமானது சில வாரங்களுக்கு முன்பு 'யாழ் நண்பர்கள்' அமைப்பின் தலைவரும், வட்டுகோட்டை விவசாய சங்கத்தின் தலைவருமான கலாநிதி சிதம்பரன் மோகன் என்பவரால் யாழ் தளபதிக்கு விடுத்த வேண்டுக்கோளுக்கமைய நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருந்த இந்த பாழடைந்த குளம் படையினரால் புனரமைக்கப்பட்டது.

வடக்கு அரலி பகுதியில் சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இந்த குளத்தின் நீர் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் காலப்போக்கில் முழு குளத்திலும் நீர் வறண்டு போய் மழை நீரை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போதுடன் ஆண்டு முழுவதும் விவசாய திட்டங்களுக்கு நீர் மிகவும் அவசியம் என்பதினால், படையினருக்கு விடுத்த வேண்டுகோளின் பேரில் தங்கள் மனிதவளத்தைப் பயன்படுத்தி விவசாய மேம்பாட்டுத் துறை உட்பட அனைத்து அந்தந்த மாவட்ட நிறுவனங்களுடனும் கலந்தாலோசித்து கனரக இயந்திரங்கள் மூலம் படையினரால் இந்த திட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் இந்த குளமானது திறந்துவைக்கப்பட்டதையடுத்து புதுப்பிக்கப்பட்ட இந்த பெரியகுளம் குளத்து நீருடன் இந்திய கங்கையில் இருந்து திட்டத்தின் கட்டடக் கலைஞர் கலாநிதி சிதம்பரன் மோகன் என்பவரால் கொண்டுவரப்பட்ட புனித நீரானது சேர்க்கப்பட்டது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் நினைவு பலகை திறந்துவைக்கப்பட்டு அடையாளபூர்வமாக ஆவணங்களும் வழங்கப்பட்டன. இதன் முழு புனரமைப்பு திட்டத்திற்கும் தேவையான நிதி விவசாய அபிவிருத்தி திணைக்கள மாவட்ட அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, குளம் திறந்துவைக்கும் நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வருகை தந்ததுடன் இராணுவத் தளபதியுடன் இணைந்து குளத்தை சுற்றி ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டனர்.

தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிக்கு படையினரால் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதுடன் வடக்கில் புனரமைக்கப்பட்டுவரும் இன்னும் சில குளங்களுக்கான முழுமையான ஒத்துழைப்பானது பாதுகாப்புப் படையினர்களால் வழங்கப்பட்டுவருகின்றன.

20191105 aralitank 07

20191105 aralitank 14

 

Comment (0) Hits: 17

பூஜித்,ஹேமசிறிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெணான்டோ ஆகியோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி வரை இவர்களது விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இவ்வுத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே வழங்கினர்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பத்தை தடுக்க தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு அமைய, குறித்த இருவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 18

அநுரவுக்கு வாக்களிப்பவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு : இரண்டாவது விருப்பு வாக்கை கோட்டாவுக்கு எதிராக வழங்குங்கள்! (காணொளி)

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்காவுக்கு வாக்களிப்பதற்கு எதிர்பார்த்திருப்பவர்கள் எவருக்காவது, கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுவிடுவார் என்ற அச்சமிருந்தால் அநுர குமார திசாநாயக்காவுக்கு 1ம் இலக்கத்தை வழங்கி விட்டு, இரண்டாவது விருப்பு வாக்கினை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வேறு யாருக்காவது வழங்குமாறு மக்கள் விடுதலை முன்னியின் அரசியல் பீட உறுப்பினர் லால் காந்த கூறினார்.

கடந்த 02ம் திகதி எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான லால் காந்த இவ்வாறு கூறினார்.  இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய லால் காந்த மேலும் கூறியதாவது,

“எம்மிடம் அதிகமான பேச்சுக்கள் இல்லை. நாம் செய்யப் போவது என்ன? வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்குச் சீட்டைப் பெற்று 12வது இடத்திலிருக்கும் எமது அநுர குமார திசாநாயக்காவின் சின்னத்திற்கு வாக்களிப்பதேயாகும்.

ஆனால், எமக்கு மூன்று விருப்பு வாக்குகள் இருக்கின்றன. அநுர குமார திசாநாயக்காவுக்கு வாக்களிப்பவர்கள் ஏனைய அனைத்தையும் புறந்தள்ளவிட்டு எமது சின்னத்திற்கு மாத்திரம் புள்ளடியிட வேண்டியதுதான்.  ஆனால் நாம் சந்திக்கும் சிலர் உங்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும். ஆனால் உங்களுக்கு வாக்களிக்கும் போது கோட்டா வென்று விடுவாறோ? எனக் கூறுகின்றனர்.

அவ்வாறானவர்களுக்கு நாம் கூற விரும்புவது ஒன்றுதான். அநுர குமார திசாநாயக்காவுக்கு ஒன்றை வழங்கிவிட்டு ஏனைய இரண்டு விருப்புக்களையும் கோட்டாவுக்கு எதிராக வேறு யாருக்கு வழங்கினாலும் அது எமக்குப் பிரச்சினையில்லை. கோட்டாவைத் தோற்கடிக்க வேண்டுமாயின், நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு இரண்டாம் விருப்பு வாக்கினை வழங்கலாம்” என்றார்.

Comment (0) Hits: 17

அஜந்த சொய்ஷா ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலகினார்! சஜித்துக்கு ஆதரவு வழங்கவும் முடிவு!

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் பராளுமன்ற உறுப்பினரான அஜந்த சொய்ஷா  போட்டியிலிருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளார்.  அவர் சஜித் பிரேமதாசாவைச் சந்தித்து தனது ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசாவின் கொள்கைப் பிரகடணத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடா்பில் ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மேலும் சில வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 26

தேர்தலில் சிறந்த தீர்வு கிடைத்தவுடன் தயாசிறியை முதலில் விரட்டியடிப்போம் - குமார வெல்கம!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிறந்த தீர்வு கிடைக்கப் பெற்றால் தயாசிறியையே முதலில் விரட்டியடிப்போம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் கொழும்பு - சுகததாச உள்ளக அரங்கில் இன்று நடைபெற்ற சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

சந்திரிகா குமாரதுங்கவுக்கு பின்னர் நானே ஸ்ரீலங்கா சுதந்திர பற்றி பேசுவதற்கு தகுதியுள்ள சிரேஷ்ட உறுப்பினராவேன். சிறிமாவோ பண்டாரநாயக்க எனக்கு அகவத்தை தொகுதியை வழங்கி 38 வருடங்களை நிறைவடைந்துள்ளன. 

மிக நீண்ட காலம் நான் சுதந்திர கட்சியின் அமைப்பளராக இருந்திருக்கிறேன். முன்னாள் பிரதமர் எஸ்.டபில்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க 1951 ஆம் ஆண்டு சுதந்திர கட்சியை கட்டியெழுப்பினார். 

டீ.எஸ்.சேனாநாயக்க உயிழந்ததன் பின்னர் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக செயற்பட்ட பண்டாரநாயக்கவுக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை என்பதாலேயே அவர் ஐ.தே.கவிலிருந்து பிரிந்து சு.கவை ஸ்தாபித்தார். 

கட்சி உருவாக்கப்பட்டு முதலாவது தேர்தலில் 8 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. 1957 ஆம் ஆண்டு மீண்டும் பாரிய வெற்றி கிடைக்கப்பெற்றது. மிகக் குறுகிய காலத்தில் அவர் பல நன்மைகளை செய்திருக்கிறார். 1959 ஆம் ஆண்டு அவர் கொல்லப்பட்டதன் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்கவே கட்சியை முன்னோக்கி கொண்டு சென்றார். 

நான் இன்று அரசியலில் வெற்றி பெற்றிருப்பதற்கும் அவரே காரணமாவார். நான் மாத்திமரல்ல. மஹிந்த ராஸபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரையும் அவரே உருவாக்கினார். 

சிரேஷ்ட தலைவியாக எமக்கு முறையான அரசியலைக் கற்றுக்கொடுத்தார். தனது குடியுரிமை நீக்கப்பட்ட போதிலும் கட்சியை வெற்றிப் பாதையில் கொண்டு சென்றார். எனவே சுதந்திர கட்சியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது. 

ஆனால் தற்போது அவ்வாறல்ல. வெவ்வேறு கட்சிகளிலிருந்து சுதந்திர கட்சியில் இணைந்தவர்கள் தற்போது கட்சியின் வரலாறு பற்றி பேசுகிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. நாமே சுதந்திர கட்சியை பாதுகாப்போம். 

அத்துடன் இந்த சம்மேளனத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் பதவிகள் அல்லது உறுப்புரிமை நீக்கப்படும் என்று யாரும் அச்சமடையத் தேவையில்லை. சந்திரிகா குமாரதுங்கவுடன் நானும் இணைந்து முன்னின்று அனைவரையும் பாதுகாப்போம்.அச்சமின்றி அனைவரும் எம்முடன் ஒன்றிணையுங்கள். இதுவே எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள இறுதி வாய்ப்பாகும். 

ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகக் கூறும் கட்சி செயலாளருக்கு எதுவும் செய்ய முடியாது. இவ்வாறானவர்கள் எத்தனை கட்சிகளுக்கு தாவியிருக்கிறார்கள் ? அவர்களால் சந்திரிகா குமாரதுங்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா ? தந்தையும் தாயும் கட்டியெழுப்பிய இந்த கட்சியிலிருந்து சந்திரிகா குமாரதுங்க நீக்கப்படுவார் என்று தயாசிறி ஜயசேகர கூறுகிறார். ' இந்த தேர்தலில் சிறந்த தீர்வு எமக்கு கிடைக்கப் பெற்றால் காதைப் பிடித்து நாமே உங்களை கட்சியிலிருந்து அப்புறுப்படுத்துவோம் ' என்பதை தயாசிறிக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் இதன்போது கூறினார்.

Comment (0) Hits: 30

ஜனாதிபதித் தேர்தல்; நிலைப்பாட்டை அறிவித்தது சித்தார்த்தன் தலைமையிலான புளொட்!

புதிய ஜனநாயக முன்னணியின்  ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதரிக்க தமிழீழ மக்கள் விடுதலை கழகம்( புளொட்) தீர்மானம் எடுத்துள்ளதுடன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ ) தீர்மானம் நாளை அறிவிக்கப்படும்.

தமிழரசு கட்சி தனித்து தீர்மானத்தை அறிவிக்காது கூட்டமைப்பாக இணைந்து தீர்மானத்தை அறிவித்திருந்தால் ஆரோக்கியமாக இருந்திருக்கும் என்கிறார் தர்மலிங்கம் சித்தார்த்தன். 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்துள்ள நிலையில், ஏனைய இரண்டு பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் கட்சிகளின் நிலைப்பாடுகள் இன்னமும் அறிவிக்கப்படாது உள்ள நிலையில் அவர்களின் நிலைப்பாடுகள் குறித்து வினவியபோதே அவர்கள் இதனை கூறினார்கள்.

இது குறித்தி  தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ )தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கூறுகையில், 

நாம் கட்சியாக இன்னமும் தீர்மானம் ஒன்றினை எடுக்கவில்லை. நாளைய தினம் எமது கட்சியின் உறுப்பினர்கள் கூடி எமது நிலைப்பாடுகள் குறித்து ஆராயவுள்ளோம். 

இலங்கை தமிழரசு கட்சியின் தீர்மானம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதேபோல் வெறுமனே ஒரு வேட்பாளரை வீழ்த்த இன்னொரு வேட்பாளருக்கு அர்த்தமற்ற ஆதரவை வழங்கவும் முடியாது. நாம் ஒரு ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றால் எமது மக்கள் சார் விடயங்களில்  முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

அவ்வாறு இல்லாது ஒரு வேட்பாளரை வெற்றிபெற செய்ய எமது மக்களை ஏமாற்ற முடியாது. சில தீர்மானங்களில் நாம் உறுதியாக உள்ளோம். எமது நிலைப்பாடுகள் குறித்து நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் பேசுவோம். எம்முடன் பேசவும் அவர் தயாராக உள்ளார். நாளைய தினம் நாம் எமது தீர்மானத்தை அறிவிப்போம் என்றார்.

எனினும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ ) உறுப்பினர்கள் இடையில் தொடர்ந்தும் இரு வேறுபட்ட நிலைப்பாடுகள் கானப்படுகின்றதாக அறிய முடிகின்றது. தாம் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காது மக்களின் விருப்பில் வாக்களிக்க வேண்டும்  என்பதை அறிவிப்போம் என்ற கருத்தும் கட்சிக்குள் நிலவுகின்றது. 

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவர் சித்தார்த்தன் இது குறித்து கூறுகையில், "நாம் ஏற்கனவே ஒரு தீர்மானத்தை எடுத்து அதில் உறுதியாக உள்ளோம். இது ஒரு மாதத்துக்கும் முன்னமே எடுக்கப்பட்ட தீர்மானம். அதாவது நாம் இரண்டு பிரதான வேட்பாளர்களில் ஒருவரை  ஆதரிப்பது, அதில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதே சரியான தெரிவு என்பதை நாம் கூறிவிட்டோம். இப்போதும் நாம் அந்த தீர்மானத்தில் உறுதியாக உள்ளோம்.

எமது நோக்கம் என்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளருடன் நிற்க வேண்டும் என்பதே. அதில் எமது தலைமைகள் தனித்தனி தீர்மானம் எடுக்க வேண்டியதில்லை. கூட்டமைப்பாக ஒரு தீர்மானத்தை வெளிப்படுத்தியிருந்தால் இன்னமும் ஆரோக்கியமானதாக இருந்திருக்கும். எவ்வாறு இருப்பினும் இப்போதும் நாம் ஒற்றுமையாக தமிழ் மக்களின் நலன்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடு. 

ஆதரவு விடயத்தில் பிரதமர் என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார்.எமது ஆதரவு குறித்து வினவினார். நாம் ஏற்கனவே எடுத்த தீர்மானம் குறித்து அவருக்கு கூறினேன். செல்வம் அடைக்கலநாதன் எம்.பியின் நிலைப்பாடு குறித்து அவருடன் பேசுவதாக கூறினார்.

எவ்வாறு இருப்பினும் எமது முழுமையான ஆதரவை சஜித் பிரேமதாசவின் வெற்றுக்காக வழங்க வேண்டும், அவ்வாறு உங்களின் ஆதரவு எமக்கு கிடைக்கும் என தான் நம்புவதாக என்னிடம் கூறினார்" என்றார்.

Comment (0) Hits: 18

தமிழ் சிறைக் கைதிகள் தொடர்பில் சஜித் மற்றும் கோட்டாபய ஆகியோரின் கொள்கைகள் இதோ!

கோட்டாபக ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய ஜனாதிபதி வேட்பாளர்களின் வரலாறு மற்றும் அவர்கள் முன்வைத்துள்ள கொள்கைப் பிரகடணம் என்பவற்றை ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே தமது கட்சி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானத்தைவெளியிட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான தரப்பான இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதமதாசாவுக்கு ஆதரவை வழங்குவதாக நேற்று ஞாயிற்றுக் கிழமை அறிவித்தது. இது தொடா்பில் பீபீசி சிங்கள சேவைக்கு அக்கடசியின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமேந்திரன் கருத்து தெரிவித்த போது, சஜித் பிரேமதாசாவுக்கு தாம் ஆதரவளிப்பதற்காக எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

“நாம் இந்த இரண்டு வேட்பாளர்களின் வரலாற்றினை ஆராய்ந்து பார்த்தோம். ஜனநாயகத்திற்கு யார் மதிப்பளிக்கின்றார்கள்?, சட்டத்தின் ஆட்சிக்கு யார் மதிப்பளிக்கின்றார்கள்? என்பவற்றை ஆராய்ந்து பார்த்தோம். எனினும் எமது ஆதரவை வழங்குவதற்கு நாம் எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சி, டெலோ மற்றும் ப்ளொட் அமைப்பு ஆகியன இணைந்தே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் செயற்படுகின்றார்.

இதே வேளை ப்ளொட் அமைப்பும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவை வழங்க முன்வந்துள்ளதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் பீபீசி சிங்கள சேவைக்குத் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 18

ஜனாதிபதி தேர்தல் : சுகாதார துவாய் விளம்பரத்தை தடை கோரிக்கை!

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு முடியும் வரையில் பெண்களுக்கான சுகாதார துவாய் விளம்பரத்தை ஒளிபரப்புவதை உடனடியாகத் தடை செய்யுமாறு மொட்டுக் கட்சியின் சட்டத்தரணிகள் சிலர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

இவ்வாறான விளம்பரங்களை ஒளிபரப்புவதன் ஊடாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அச்சட்டத்தரணிகள் சுட்டிக் காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் ITN தொலைக்காட்சி ஊடாக ஒளிபரப்பான “பேட் மேன்” திரைப்படம் ஒளிபரப்பப்படுவதைத் தடுப்பதற்கும் இத்தரப்பினர் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

Comment (0) Hits: 31

"தேசிய கொடியை ஏற்றிய சம்பந்தன் சஜித்துடன். ஈழக் கொடியை ஏற்றிய வரதராஜா, கோட்டாவுடன்" - மங்கள! (காணொளி)

இலங்கையின் அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டுள்ள, இலங்கையின் தேசிய கொடியை மதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆர். சம்பந்தன் போன்றோர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்கும் போது, கோட்டாபயவுக்கு ஆதரவை வழங்குவது 1990ம் ஆண்டில் திருகோணமலை நகரில் தனியான ஈழ நாட்டைப் பிரகடணப்படுத்தி, இலங்கை வரலாற்றில் முதல் தடவையாகவும், ஒரே தடவையும் ஈழக் கொடியை பகிரங்கமாகவே ஏற்றிய வரதராஜா பெருமாள் போன்றோரே என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தரை நகரில் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தன் போன்றோர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பணியாற்றுவது ஒன்றும் புதிய விடயமல்ல என்றும், அவர் 2013ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்ட மேடையில் ஏறி இலங்கை தேசியக் கொடியை ஏற்றிய, இலங்கை தேசிய கொடியை மக்களிடத்தில் பிரபலப்படுத்திய ஒரு அரசியல்வாதி என்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.  அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நிதி அமைச்சர் மேலும் கூறியதாவது,

“இது ஒன்றும் புதிய விடயமல்ல. தமழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் எம்மோடு இணைந்தே பணியாற்றுகின்றது. எம்மோடு பாரியளவிலானோர் தற்போது இணைந்து கொண்டிருக்கின்றார்கள். தற்போது தெரண டீவியும்  நிவ்ஸ் அலார்ட் ஒன்றை போட்டுள்ளதை நான் கண்டேன்.  இது நாம் நினைத்த விடயங்களேயாகும். அவர்கள் இப்போது டீஎன்ஏ கட்சியும் சஜித் பிரேமதாசாவுக்கு உத்தியோகபூர்வமாக ஆதரவை வழங்குவதாகக் கூறியுள்ளதாக கூறுகின்றனர்.  இனி அவர் இதோ புலிகளும் சஜித்துடன் சேர்ந்துவிட்டார்கள் எனக் கூறுவார்கள்” என்றார்.

Comment (0) Hits: 30

கோத்தாபயவின் பண்டுவஸ்நுவர கூட்டத்தில் தயாசிரி இல்லை!

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து குருநாகல் மாவட்டத்தின் பண்டுவஸ்நுவர தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அந்தத் தொகுதியின் ஸ்ரீ.ல.சு.கட்சியின் அமைப்பாளர் தயசிறி ஜயசேகர கலந்துகொள்ளவில்லை.

மொட்டுக் கட்சியினரின் மேடையில் ஏறும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை இலக்கு வைத்து, மொட்டுவின் பிரதேச அரசியல்வாதிகள் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக “ஹூ” கோஷம் போடுவதே இதற்குக் காரணமாகும். 

இதேவேளை, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயசிறி ஜயசேகரவினால், நவம்பர் 8 ஆம் திகதி ஹெட்டிபொயில் கோத்தாபய ராஜபக்ஷ பங்கேற்கும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றை நடாத்துவதற்கு ஏற்பாடு செயப்பட்டுள்ளது..

மாவட்டத்தின் அனைத்து ஸ்ரீ.ல.சு.க அமைப்பாளர்களுக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 தயாசிரி ஹெட்டிபொலவில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 
Comment (0) Hits: 26

பக்கம் 6 / 66