V2025

செய்தி

மஹிந்தவிடம் இல்லாத ஆளுமை மைத்திரியிடம் உண்டு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் இல்லாத ஆளுமை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உண்டு என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஹிரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நபர்களுக்கும் வெவ்வேறு விதமான ஆளுமைகள் உண்டு எனவும், ஜனாதிபதி மைத்திரி மீளவும் தம்மை சிறையில் அடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய அனைத்து அரசியல்வாதிகளை விடவும் ஜனாதிபதி மைத்திரி வித்தியாசமானவர் எனவும், தம்மை விடுதலை செய்யுமாறு ஒரு போதும் தாம் மைத்திரியிடம் கோரியதில்லை எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 52

வைத்தியர் ஷாபிக்கு எதிராக இதுவரை 116 புகார்கள்

 opp

வைத்தியர் மொஹமட் ஷாபியிடம் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட மேலும் 65 தாய்மார்கள் நேற்று  குருனாகல வைத்திய சாலையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
நேற்று முந்தினம் 51 புகார்கள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் இதுவரை கிடைக்கப்பெற்ற மொத்த புகார்களின் எண்னிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.
தம்புள்ள வைத்தியசாலையில் சேவையாற்றிய காலத்தில் இவரிடம் அறுவை சிகிச்சை செய்துகொண்ட 10 தாய்மார்களின் புகார்களும் தம்புள்ள வைத்தியசாலைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இவருக்கெதிரான விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி குருனாகல நகரில் முழுக்கடையடைப்புடன் ஹர்த்தாலும் இடம்பெற்றது.
s.m
Comment (0) Hits: 55

தெமட்டகொட குண்டு வெடிப்பில் மரணித்த பொலீஸ் உத்தியோகத்தரின் பாரியாருக்கு 10 இலட்சம் மதிப்புள்ள காசோலையை வழங்கிய ஜனாதிபதி

dematagoda house
தெமட்டகொட குண்டுவெடிப்பில் மரணித்த பொலீஸ் உத்தியோகத்தர் பாதிய பண்டாரவின் பரியாருக்கு ஜனாதிபதியிடமிருந்து இழப்பீடு வழங்கப்பட்டது.
கொழும்பு  குற்றத்தடுப்பு பிரிவில் சேவையாற்றிக்கொண்டிந்த  போது, தெமட்டகொட குண்டுவெடிப்பில் மரணமடைந்த பாதிய பண்டாரவின் பாரியாரிடம், 10 இலட்சம் மதிப்புள்ள காசோலையை ஜனாதிபதி வழங்கினார்.
பாதிய பண்டாரவின் மனைவி இனோகா ஷிரானி ஜனாதிபதியிடமிருந்து காசோலையை பெற்றுக்கொள்ளும் நிகழ்வுக்கு  குடும்ப அங்கத்தவர்களும் சமூகமளித்திருந்தனர்.dematagoda house
s.m
 
Comment (0) Hits: 49

அமித் வீரசிங்க தொடர்பான சாட்சியங்களை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு

amith

மக்களின் ஒற்றுமையை சீர்குழைத்து இனவாத  தூண்டுதல்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த மஹசோனா குழுவின் தலைவன் அமித் வீரசிங்கவை  இன்று வரை தடுத்து வைக்குமாறு கொழும்பு மேலதிக  நீதிபதி ஷலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார் .

மக்களின் ஒற்றுமையை சீர்குழைத்து இனவாத  தூண்டுதல்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த மஹசோனா குழுவின் தலைவன் அமித் வீரசிங்கவை  இன்று வரை தடுத்து வைக்குமாறு கொழும்பு மேலதிக  நீதிபதி ஷலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்சம்பவம் தொடர்பில் முழுமையான சாட்சிகளை  சமர்ப்பிக்குமாறு ,கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

s.m

Comment (0) Hits: 49

ஹிஸ்புல்லாவுக்கு புதிய பதவி வழங்கிய  ஜனாதிபதி

 
hiz
ஜனாதிபதி  மைத்திரியினால் கிழக்கு மகாண ஆளுனர்  ஹிஸ்புல்லாவுக்கு ,புதிய பதவியொன்று வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களின் இனைப்புக் குழுவில், இணைத்தலைவர் பதவியே ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களை ஆராய்ந்து, துரிதப்படுத்தும் முகமாகவே இப்பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
திருகோணமலை  மாவட்ட இணப்புக் குழுவில் பிரதியமைச்சர் மஹரூப் ,மற்றும் பாஊ. சம்பந்தன் ஆகியோர் அங்கம் வகிப்பதோடு, இக்குழுவில் புதிதாக ஹிஸ்புல்லாவும்  இணைந்து  செயற்படும் அதேவேளையில், எதிர்வரும் 10 ம் திகதி மாவட்ட செயலாளர் அலுவளக அரங்கில் மாவட்ட இணைப்புக் கூட்டம் இடம்பெறவிருக்கிறது.
s.m
 
 
 
Comment (0) Hits: 53

ஆறு லட்சம் குடும்பங்கள் புதிதாக சமூர்த்தி நலன் பெற்றுக்கொள்ள உள்னளர்

ஆறு லட்சம் குடும்பங்கள் புதிதாக சமூர்த்தி நலன் பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆறு லட்சம் குடும்பங்களுக்கு சமூர்த்தி நலன் திட்டம் வழங்கும் நிகழ்வுகள் எதிர்வரும் 30ம் திகதி முதல் ஜூன் மாதம் 15ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வுகளில் பங்றே;க உள்ளனர்.

சமூர்த்தி நலன் திட்டம் வழங்கும் நோக்கில் திறைசேரி ஆயிரம் மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளது.

Comment (0) Hits: 39

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வழிநடத்திய மொட்டு உறுப்பினர் நாட்டைவிட்டு தப்பியோட்டம்


அண்மையில் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மலர்மொட்டு அரசியல்வாதி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அரசியல்வாதி ஒருவரே இவ்வாறு நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த அரசியல்வாதி நாத்தான்டிய பிரதேச சபையை பிரதிநிதித்துவம் செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதேச சபையிடம் விடுமுறை அனுமதி கோரி குறித்த அரசியல்வாதி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

உபுல் ஹேரத் என்ற அரசியல்வாதியே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்

Comment (0) Hits: 44

தம்மிக்க பெரேரா தேர்தலில் போட்டியிடும் திட்டத்தை கைவிட்டார்

பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா எதிர்வரும் 2020ல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திட்டத்தை கைவிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comment (0) Hits: 46

ரிசாட் பதியூதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஜே.வி.பி ஆதரவு

அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா திர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் என ஜே.வி.பி அறிவித்துள்ளது.

ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த தமது கட்சிக்கு எந்தவொரு அமைச்சரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கும், ரிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும் தொடர்பு கிடையாது என தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 52

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் உங்களிடம் பொலிஸ் பேச்சாளர் வேண்டுகோள்

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது இத்தினங்களில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் பேச்சாளர் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

பழைய சம்பவங்களை நிகழ்கால சம்பவங்களைப் போன்று சித்தரிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கு இடையில், முறுகலையும், குரோதத்தையும் ஏற்படுத்தும் இதுபோன்ற பதிவுகள் தொடர்பில் தகவல் வெளியிடப்படுகின்றன.

சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் பேச்சாளர் பேச்சாளர் ருவான் குணசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

Comment (0) Hits: 159

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக ரவி விஜயகுனவர்தன நியமனம்

 
வடமாகாணத்திற்கான புதிய சிரேஷ்ட பிரதி போலிஸ் மாஅதிபராக ரவி விஜயகுனவர்தன கடைமைகளை பொறுப்பேற்றார்.
வடமாகாண சிரேஷ்ட போலிஸ் மாஅதிபராக கடைமையாற்றிய ரொஷான் பெர்ன்ணோடோ  தென் மற்றும் சபரகமுவ பகுதிக்கு இடமாற்றம் பெற்றதையடுத்து, தென் மற்றும் சபரகமுவ பகுதியில் பணியாற்றிய ரவி விஜயகுனவர்தன வடமாகாணத்திற்கு இடமாற்றப்படடுள்ளார்.
யுத்த காலப்பகுதியில் சிரேஷ்ட பிரதி போலிஸ் அதிபராக பணியாற்றிய ரவி விஜயகுனவர்தன தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்களிடையே மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தார்.
முன்னால் போலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தரவினால் மிகவும் பாதிப்படைந்த ரவி விஜயகுனவர்தன, அவருக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
s.m
Comment (0) Hits: 56

நாரம்மல பகுதியில் முன்னால் பொதுஜன பெரமுன வேட்பாளர் கைது

podujana
 
நாரம்மல பொல்கஹயாய பகுதியில் இராணுவம் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட போது ,பெற்றோல் குண்டுகள் ,இராணுவ உடைகள் ,வெளிநாட்டு இரானுவ உடைகளுடன் , இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு படையினரிடமிருந்து கிடைத்த தகவலின் படி, வீடொன்றை சோதனை செய்த போது மேற்குறிப்பிட்ட பொருட்கள் கிடைக்கப்பெற்றதோடு, அவ்வீட்டின் உரிமையாள்ர் 2018 ம் ஆண்டு நடைப்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஊடாக போட்டியிட்டதாக குறிப்பிடுவதோடு அவருடன் கைதுசெய்யப்பட்ட மற்றைய நபர் அவருடைய மகன் என்றும் குறிப்பிடப்படுகிறது.
s.m
 
Comment (0) Hits: 54

மதுமாதவ அரவிந்த வெளிநாடு  செல்ல தடை

madu uuuu
 
கடந்த 13 ம் திகதி மினுவங்கொட  நகரில் இடம் பெற்ற தாக்குதல் சம்பந்தமாக வெளிநாடு செல்வதற்கு, மூவருக்கு  மினுவங்கொட நீதிபதி சீ.ஏ.சமரதிவாகார தடைவிதித்துள்ளார்.
 
பிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த, அதுல தயாரத்ன, நுவன் உபேந்திர ஆகியோருக்கே வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
s.m
Comment (0) Hits: 50

21/4 தாக்குதல் : காத்தான்குடியில் மட்டும் 63 பேர் கைது

21/4 தாக்குதல்களை அடுத்து மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் மட்டும் இதுவரை 63 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ். பயங்கரவாதத்துடன் தொடர்புகொண்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

21/4 தாக்குதல்களை அடுத்து குண்டுத் தாக்குதலைத் திட்டமிட்டவர்களில் முக்கியமான நபர் சஹ்ரான் என பொலிஸார் அடையாளம் கண்டதை அடுத்து, குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினரும், பொலிசாரும் சோதனை மேற்கொண்டனர்.

இந்தத் தேடுதல்கள் தொடர்ந்த நிலையில், கடந்த ஒரு மாத காலத்தில் 63 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் பொதுமக்கள் வழங்கியத் தகவல்களுக்கமையவே பலர் கைதுசெய்யப்பட்டதாக தெரியவருகிறது. இந்த நிலையில், குறித்த தாக்குதலுக்கு நேரடியாக, மறைமுகமாக உதவி செய்தவர்கள் குறித்து விசாரணைகளும், தேடுதல்களும் தொடர்ந்து வருவதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

Comment (0) Hits: 141

ஆலயத்தில் கைதான புஹாரி மொஹமட்டிடம் 72 மணிநேர விசாரணை

திருகோணமலை மூதூர் ஆலயத்தில் போலியான அடையாளத்துடன் பூசகரின் உதவியாளராக பணியாற்றிவந்த நிலையில், கைதுசெய்யப்பட்டவர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்.
 
திருகோணமலை கிளிவெட்டி மூதூர் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிவா என்ற பெயரில் தன்னை போலியாக அடையாளப்படுத்தி பூசகரின் உதவியாளராக பணியாற்றியவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கடந்த 24ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.
 
அவர் வாழைச்சேனையை சேர்ந்த புஹாரி மொஹமட் லாபிர் கான் (40) என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
சிவா என்ற பெயரில் கடந்த 15 மாதங்கள் குறித்த ஆலயத்தில் பூசகரின் உதவியாளராக அவர் பணியாற்றியுள்ளார்.
 
இந்த நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ள அவர் 72 மணிநேர தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
 
குறித்த ஆலயத்தில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிருதத்தில் கருத்தடை மாத்திரையை கலந்த குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டதாக தகவல் வெளியிடப்படுகின்றமை தொடர்பில் வினவியபோது, அது குறித்து தறபோதைக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவலை வெளியிட இயலாது என பொலிஸ் தலைமையக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
விசாரணைகளின் பின்னரே மேலதிக தகவல்களை வெளியிட முடியும் என்றும் அவர் கூறினார்.
s.m
Comment (0) Hits: 46

பதற்றமான சூழல் ஏற்படலாம்: எச்சரிக்கும் ஞானசார தேரர்

நாளையும் நாளை மறுதினமும் செய்தியாளர்களைச் சந்தித்து முக்கியமான பல தகவல்களை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல்களினால் சில சமயம் பதற்றமான சூழல் ஏற்படலாம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடந்த பூஜை வழிபாடுகளின் பின்னர் மக்கள் சந்திப்பொன்றில் ஞானசார தேரர் இதனைத் தெரிவித்தார்.

அங்குத் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

குறித்த தகவல்களை மிகவும் பொறுப்புடன் வெளியிடவுள்ளோம், என்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும், பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளாமல், பொறுமையுடன், தூரநோக்குடன் செயற்படுமாறு விசேடமாக இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். பிரச்சினைகள் ஏற்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் எங்களுக்கே நஷ்டம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comment (0) Hits: 153

இராணுவ ஆட்சியா? சட்டவிரோதமாக செயல்படாது என்கிறார் இராணுவத் தளபதி

இலங்கை இராணுவம் தொழில் ரீதியில் ஒழுங்குகளை பேணிவருகின்ற ஒழுக்கமுள்ள ஒரு பிரிவினர் எனவும், இதனால் எக்காரணம் கொண்டும் சட்ட முரணான நடவடிக்கைகளில் இராணுவம் சம்பந்தப்படாது எனவும் லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறுகிய காலத்துக்காவது நாட்டின் அரசாங்கத்தை ஏற்குமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து இராணுவத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு தான் பதிலளித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தியை இராணுவத் தளபதி முற்றாக நிராகரித்துள்ளார்.

நாட்டு மக்கள் இராணுவத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர் எனவும், நாட்டு மக்களினதும், நாட்டினதும் பாதுகாப்பை வழங்குவதில் இராணுவம் பிரதான பொறுப்பு வகிப்பதாகவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை இராணுவம் நாட்டின் தலைவரான ஜனாதிபதியின் கட்டளைக்கு ஏற்ப, நாட்டின் அரசியலமைப்புக்கு மதிப்பளித்து செயற்படுகின்றது. இதனால், நாட்டின் தலைவருக்கோ, அரசியலமைப்புக்கோ எதிராக ஒருபோதும் இராணுவம் செயற்படாது எனவும் இராணுவத் தளபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தை இராணுவம் பொறுப்பேற்றால் சிறந்தது என சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல் குறித்து சகோதர ஊடகமொன்று இராணுவத் தளபதியிடம் வினவியதற்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

 

Comment (0) Hits: 122

ரிஷாட் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக முறைப்பாடு

his and ris
 
அமைச்சர் ரிஷாட் பத்யுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக ,போலீஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக இந்த முறைப்பாடு குற்றத்  தடுப்பு பிரிவினருக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் ருவன் குனகேகர தெரிவித்தார்.
இதேவேளையில் இத்தேகந்தே சத்தாதிஸ்ச  தேரர் அவர்கள் ரிஷாட் பதியுதீனுக்கெதிராகவும், அங்குலுகல்லே சிரி ஜினானந்த தேரர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராகவும், முறைப்பாடு செய்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.
Comment (0) Hits: 52

பக்கம் 54 / 66