V2025

விசேட செய்தி

ஜாக்கிரதை! கோதாவின் படையணி தயார் நிலையில்!

வரும் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படவுள்ள கோதாபய ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக தனியான படையணியொன்று ஈடுபடுத்த பொதுஜன பெரமுன என்ற மொட்டுக் கட்சி தீர்மானித்துள்ளதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுகுறித்து சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சட்டரீதியான பாதுகாப்புத் தரப்பிற்கு மேலதிகமாகவே இந்த பாதுகாப்புப் படையணி உருவாக்கப்பட்டு வருகிறது. சட்டரீதியான பாதுகாப்புத் தரப்பிற்கு உதவும் வகையில் இந்த நிழல் படையணி உருவாக்கப்படுகிறது. இதற்கமைய ஒரு தேர்தல் தொகுதியில் 50 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர். பாதுகாப்புத் தரப்பில் இருந்து ஓய்வுபெற்றவர்களும், சட்டரீதியாக விலகியவர்களும் உள்ளடங்களாக இந்த 50 பேரும் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

கோதாபய ராஜபக்சவிற்கு போதுமான பாதுகாப்பு அரசாங்கத்தினால் கிடைக்கப்பெறாத நிலையில், இந்த விசேட பாதுகாப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் மூலம் அறியமுடிகிறது.

அத்துடன், மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்சவும், கோதாபய ராஜபக்சவின் பாதுகாப்பு விடயத்தில் பணியாற்றுவதாக அந்தத் தகவல்கள் மூலம் தெரியவருகிறது.

கோதாபய ராஜபக்சவுடன் இராணுவத்தில் இணைந்து பணியாற்றிய இராணுவ அதிகாரிகளும், இந்த இரகசிய பாதுகாப்பு வேலைத் திட்டத்தில் தன்னார்வ அடிப்படையில் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக அறியமுடிகிறது.

கோதாபய ராஜபக்ச கடந்த காலங்களில் 'வியத் மக' 'எலிய' உள்ளிட்ட அவருக்கு ஆதரவான தரப்பினருடன் நாடு முழுவதும் சென்று கருத்தரங்குகளில் கலந்துகொண்டிருந்தார். இதன்போது அவருக்கு பாதுகாப்பு குறித்து பிரச்சினைகள் இருப்பதாக எவ்விடத்தில் குறிப்பிடவில்லை.

கோதாபய ராஜபக்சவின் பாதுகாப்பு குறித்து பிரச்சினைகள் இருக்குமாயின், அதுகுறித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவிக்க வேண்டும். ஜனாதிபதி வேட்பாளருக்கு பாதுகாப்பு குறித்து பிரச்சினைகள் இருக்குமாயின் அதுகுறித்து புலனாய்வுப் பிரிவினர் அறிவிக்க வேண்டும். இதன்மூலம் அவருக்கு, எதிர் தரப்பு அரசியல் மூலம் அச்சுறுத்தல் உள்ளதா? அல்லது அவரால் ஒழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளினால் அச்சுறுத்தல் உள்ளதா? அல்லது தற்போது புதிதாக உருவாக்கியுள்ள முஸ்லிம் அடிப்படைவாதத்தினால் அச்சுறுத்தல் உள்ளதா? என்பதை அறிவிக்க வேண்டும்.

சட்டத்திற்குப் புறம்பாக முன்னெடுக்கப்படும் ஆயுதக் குழுக்களுடன் கோதாபய ராஜபக்சவிற்கு ஏராளமான தொடர்புகள் இருந்ததாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. ராஜபக்ச ஆட்சிக் காலத்தில், அவரின் உத்தரவின்படியும், அவர் அறிந்திருக்கும் வகையிலும், அவ்வாறான குழுக்கள் இயங்கிவந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா பல முறை குறிப்பிட்டிருந்தார்.

மருதானை ட்ரீபொலி இராணுவ முகாமில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இராணுவத்தினரும், அவ்வாறான குழுவொன்று என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. காரணம், சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை உள்ளிட்ட பல கொடுரமான ஊடக அடக்குமுறைகள் குறித்து இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

'ரிவிர' பத்திரிகையின் ஆசிரியர் உபாலி தென்னகோன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, குறித்த முகாமில் இருந்த இராணுவப் புலனாய்வு உறுப்பினர்கள் இருவர் மீது சட்டமா அதிபர் திணைக்களம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இராணுவ ஆட்சியைப் போன்றதொரு நிர்வாகத்தை கடந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதியில் மக்கள் உணர ஆரம்பித்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. அதன்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோதாபய ராஜபக்ச பதவி வகித்து வந்தார்.

முன்னாள் இராணுவ அதிகாரிகள் இணைந்து புதிதாக உருவாக்கப்படவுள்ள நிழல் பாதுகாப்பு பிரிவு குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கோதாபய ராஜபக்ச ஆட்சியின் கீழ் மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்ச நிலை உருவாக்கிவிடுமோ என்ற சந்தேகங்கள் எழ ஆரம்பித்துள்ளன.

ஜனநாயகத்தை மதிக்கும், விரும்பும் தரப்பினர் இதுகுறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்பதுடன், இதனை எதிர்ப்பதற்குத் தயாராக வேண்டும் என்ற தவிர்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

Comment (0) Hits: 64

தம்மிக பெரேரா சூதாட்ட வர்த்தகர்- எஸ்.பி. திசாநாயக

s.b

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பிரபல தொழிலதிபர் தம்மிக பெரேரா போட்டியிடவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலாவுகின்றன.

கெடம்பே விகாராதிபதி மற்றும் எஸ்.பீ.திசாநாயக ஆகியோருக்கிடையிலான அரசியல் நிலவரம் தொடர்பாக கலந்துரையாடிய போது  இது சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டது.

பிரதமர் மற்றும் தம்மிக பெரேரா ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போது, போது வேட்பாளருக்கான விருப்பத்தை தெரிவித்ததாக கூறப்படும் விடயம் தொடர்பாக பேராதனை பல்கலைகழக முன்னால் பேராசிரியர் ஆர்.ட்ப்ளியு. ரனசிங்க கேள்வியெழுப்பினார்.

dhammika

இதற்கு பதிலளித்த எஸ்.பி. தம்மிக பெரேரா ஒரு சூதாட்ட வியாபாரி என்று தெரிவித்தார்.

 

Comment (0) Hits: 94

இனவாதம் : மனம் திறந்த டொக்டர் சாபியின் மனைவி

ஊடகச் செய்திகளினால் எத்தனையோ நல்ல விடயங்கள் நடந்துள்ளன. ஆனால் அதே ஊடகங்களினால் பாதிப்பு ஏற்படும் சம்பவங்களையும் நாம் பார்த்திருக்கிறோம். பொறுப்பற்ற, பொய்களைக் கூறும் ஊடகங்களினால் ஒரு குடும்பம் நிர்க்கதியாகியுள்ளமை இதற்கு சான்றாகியுள்ளது.

ஏப்ரல் 21ஆம் திகதி வரை அனைத்தும் சீராக நடந்துகொண்டிருந்தன. 21 நடந்த தாக்குதலின் பின்னர், இலங்கையே நிலைகுலைந்துபோனது. நேரடியாகவும், மறைமுகமாகவும் அனைத்து இலங்கையர்களும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டனர்.

மறைத்துவைத்திருந்த இனவாதத்தை ஏராளமானோர் கக்க ஆரம்பித்தனர். ''மனிதாபிமானம் கொண்டவர்கள்' என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களிடமிருந்து வந்த வார்த்தைகள், ஏராளமானோரைக் காயப்படுத்தியது.

தமது பங்குக்கு ஊடகங்களும் இனவாதத்தைக் கக்க ஆரம்பித்ததை இந்தச் சம்பவங்களின் பின்னர் பார்க்க முடிந்தது. இனவாதம் மனித உயிர்களையே காவுகொள்ளும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது இலங்கையில் நடந்தும் இருக்கிறது. இன்னும் நடந்துவிடுமோ என்ற அச்சமும் இருக்கிறது.

அரசியலுக்காக கக்கப்படும் இனவாதத்தை இனிக்க இனிக்க அனைவரும் பேச, அதில் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு குறுகிய அரசியல் இலாபத்தை எதிர்பார்க்கும் ஊடகங்களும் துணைபோகின்றன.

Snake M

அப்படித்தான் இனவாத ஊடகங்களினால் ஒரு குடும்பம் நிர்க்கதியாகியிருக்கிறது. தந்தையை பிரிந்து பிள்ளைகள் பரிதவிக்கின்றனர். ஒரு பிள்ளை தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்படும் அளவிற்கு ஊடகங்கள் தமது பங்கை செய்துள்ளன. அதனைப் பகிர்ந்து இனவாதிகளும் எரிகின்ற எரிப்பில் எண்ணெயை ஊற்றுகின்றனர்.

ஒருவர் மீது குற்றச்சாட்டுக்கள் இருக்குமாயின் அதுகுறித்து விசாரிப்பதில் எவ்வித எதிர்ப்பும், சிக்கல்களும் இல்லை. ஆனால் இனவாதமும், குறுகிய அரசியல் இலாபமும் கலந்து, ஒரு குடும்பத்தை, ஒரு பிரிவினரை இலக்குவைத்து நடத்தப்படும் விசமத்தனமான பிரசாரங்கள் பாரிய அழிவுகளை ஏற்படுத்துகின்றன.

இதற்கு திவயின என்ற சிங்களப் பத்திரிகை ஒரு தலைப்புச் செய்தியை வெளியிட்டு அடித்தளமிட்டது. 4000 பௌத்த சிங்களப் பெண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்ததாக மொகமட் சாபி என்ற மருத்துவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது. வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தார், தௌகீத் ஜமாத் உறுப்பினர் என பல தகவல்களை அந்தச் செய்தி கூறியிருந்ததை நீங்களும் அறிந்திருப்பீர்கள். செய்தியின் பின்னணி அறியாத மக்களும், அதனை நம்பி, தெரிந்த தெரியாத கருத்துக்களை பரப்ப ஆரம்பித்தனர். அடிப்படையற்ற தகவல்கள் அடங்கிய செய்தியின் பின்னணி என்ன என்பது குறித்து தேட ஆரம்பித்தோம்.

என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள பாதிக்கப்பட்ட குடும்பத்தின் தலைவியைச் சந்தித்தோம். திருமதி மருத்துவர் இமாராவைச் சந்தித்துப் பேசினோம். அவரும் குருணாகல் வைத்தியசாலையின் மருத்துவராக பணியாற்றுகிறார்.

தற்போதைய நிலை என்ன கேட்டோம். பிள்ளைகளுடன் நிர்க்கதியாகியுள்ளேன் என்று பேச ஆரம்பித்தார்.
''என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருக்கிறேன். நாம் எந்த தவறையும் செய்யாதவர்கள். அதனால் பயம் இல்லை. ஆனால் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் உண்மையை அறியாது வெளியிடப்படும் பொய்கள் தான் எம்மை மேலும் சிரப்படுத்துகின்றன. மூன்று குழந்தைகளுடன் இதில் இருந்து மீள போராடிக் கொண்டிருக்கிறோம். என்றார்.

Safi DR

கணவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் அவரை சந்திக்க கிடைத்ததா எனக் கேட்டோம்.


''சந்தித்தேன். இவர்கள் கூறுவதைப்போல் அவர் எவ்வித தவறையும் செய்யவில்லை. சமூகத்தின் மீது அக்கறைக் கொண்டே எப்போதும் செய்யப்பட்டு வந்துள்ளார். அதனால் இதிலிருந்து மீண்டு வந்துவிடலாம் என்ற திடமான நம்பிக்கையில் இருக்கிறார். அந்த நம்பிக்கை என்னையும் பலப்படுத்துகிறது. மூன்று பிள்ளைகளுடன் நானும் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளேன். மனநல மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று வருகிறேன். பிள்ளைகளுக்காக அனைத்தும் செய்ய வேண்டியிருக்கிறது.. என்று கூறினார்.

நாம் அவரைச் சந்தித்தபோது, அவருடன் 12 வயது இரண்டாவது மகனை மட்டும் அழைத்து வந்திருந்தார். ஏனைய இருவரும் எங்கே என்று கேட்டோம். உங்களின் குடும்பம் தற்போது சந்தித்துள்ள நெருக்கடி குறித்தும், தந்தையின் நிலை குறித்தும் பிள்ளைகள் அறிவார்களா எனக் கேட்டோம். 10 வயது மகளுக்கும், 12 மகனுக்கும் பெரிதாக இதுகுறித்த விபரங்கள் தெரியவில்லை, ஆனால் மூத்த மகள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விபரித்தார்.

''மூத்த மகள் அப்பா மீது அதிக பாசம் கொண்டவள். அவரும் அவள் மீது அதிக அன்புகொண்டுள்ளார். தந்தைக்கு இவ்வாறு நடந்த சம்பவம் மகளை தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்குக் கொண்டுபோய்விட்டுள்ளது. அதனால் அவளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அவளுக்கும் மனநல மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.'' என்று விபரித்தார்.

உண்மையில் ஊடகங்களில் வெளிவரும் செய்தியின் பின்னணி என்ன என்று கேட்டோம். கூறப்படுவதைப் போல் ஒரு மருத்துவரினால் தன்னிச்சையாக சத்திர சிகிச்சையொன்றையோ, குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை ஒன்றையோ செய்துவிட முடியுமா என்ற கேள்வி உங்களைப் போலவே எங்களுக்கும் இருந்தது. ஒரு மருத்துவராக பணியாற்றும் அவரிடமே அதற்கான வாய்ப்புக்கள் குறித்துகேட்டோம்.

''ஒரு சத்திர சிகிச்சை செய்வதை ஒரு மருத்துவர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. மகப்பேறு மருத்துவர் நிபுணர் ஒருவரே யார் சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார். அதன்பின்னர் அனுபமுள்ள மகப்பேறு மருத்துவர் ஒருவரும், அவருக்கு உதவிக்காக மருத்துவர்களும் தாதிமார், சிற்றூழியர்கள் என குறைந்தது 14 - 16 கண்கள் பார்த்துக் கொண்டிருக்கும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் எவ்வாறு அவர்களுக்குத் தெரியாமல் சத்திர சிகிச்சை செய்ய முடியும்? இதனை யோசித்துப் பார்க்க வேண்டும். இதனை அனைத்து மருத்துவர்களும் அறிவார்கள்.' 'என்று கூறினார்.

அப்படியென்றால், அந்த மருத்துவர்கள் ஏன் இதற்கு எதிராக பேசுவதில்லை என்று கேட்டோம்.
''இந்தச் சந்தர்ப்பத்தில் யாராலும் கதைக்க முடியாதுள்ளது. இதுகுறித்து கதைத்தால், அவர்கள் மீது சேறுபூசப்படுகிறது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு அறிவித்துள்ளோம். ஆனால், அவர்கள் எதனையும் செய்வதாக இல்லை. கடிதமொன்றின்மூலம் அறிவிக்குமாறு கூறினார்கள். அறிவித்துள்ளோம். எதுவும் நடப்பதாக இல்லை. இதுகுறித்து ஆதரவாக பேசுபவர்களையும் சிலர் கடுமையாக விமர்சிக்கின்றனர். ஒரு பெண் இதுகுறித்த நியாயத்தை எழுதியிருந்தார். ''நீ மருத்துவரின் சின்னவீடா'' என்று கேட்குமளவிற்கு மிக மோசமாக நடந்துகொள்கின்றனர்.'' என்று கவலையாக கூறினார்.

உங்களை எல்லோரும் சந்தேகப்பட்டு, விமர்ச்சிக்கின்றார்களா? உங்களுக்கு யாரும் ஆதரவாக பேசுவதில்லையா? என்று கேட்டோம்.
''பேசுகின்றனர். டொக்டருக்கு எதிராக குருணாகல் வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு பலவந்தமாகவே ஏராளமானோர் அழைக்கப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள செல்ல முன்னர் பலர் என்னுடன் தொடர்புகொண்டு கதைத்தார்கள். ''எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்டாயம் போக வேண்டி ஏற்பட்டுள்ளது. அதனால் எங்கள் மீது கோபம் கொள்ள வேண்டாம்.'' என்று கூறிவிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றார்கள். திட்டமிட்டு எங்களை இலக்குவைத்து தாக்குகின்றனர் என்பதை அறிவோம். என்று கூறினார்.

இதன் பின்னணியில் ஏதேனும் அரசியல் இருப்பதாக சந்தேகிக்கிறீர்களா என்று கேட்டோம். அதுகுறித்து தனக்குத் தெரியாது என்று கூறினார். ஆனால், கணவருக்கு உள்ள அரசியல் தொடர்புகள் குறித்தும் இதன்போது அவர் விபரித்தார்.

 ''2018ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் எனது கணவர் தேர்தலில் போட்டியிட்டார். எங்கள் குடும்பத்தாருக்கு அரசியல் ஆர்வம் இல்லை. அதனால் அவரின் அரசியல் செயற்பாடுகளை நாம் எப்போதும் ஊக்குவிக்கவில்லை. அதன்பின்னர் அவர் அரசியலில் இருந்து முழுமையாக விலகிக்கொண்டார். அரசியல் செய்தவர்களுடன் தொலைபேசி மூலம்கூட தொடர்புகொள்வதில்லை. இவ்வளவுதான் அவருக்கு இருக்கு அரசியல் தொடர்பு என்பதை அறிவேன். தற்போது எமக்கெதிராக நடத்தப்படுவது திட்டமிட்ட செயலா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதனுடன் மொட்டுக் கட்சிக்காரர்கள் தொடர்புபட்டுள்ளதாக கூறுகின்றனர். அதுகுறித்து எனக்கு சரியாக சொல்லத்தெரியவில்லை. ஆனால் எதனை நம்புவது எதனை நம்பாமல் இருப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறேன்.

கணவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்படுகிறது. நீங்கள் கோடீஸ்வர குடும்பம் என்று சொல்லப்படுகிறது. உங்கள் கணவர் தௌகீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்றும், நீங்கள் கோடீஸ்வர குடும்பம் என்று குறிப்பிடுகிறது.'' இந்த கேள்விகளுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள் எனக் கேட்டோம்.

''நாம் பாரம்பரிய முஸ்லிம்கள். எந்தவொரு சமயப் பிரிவுடனும் எங்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. இது நிரூபிக்க முடியாத அப்பட்டமான பொய். எங்களை கோடீஸ்வர மருத்துவக் குடும்பம் என்று கூறுகிறார்கள். எங்களுக்கு குருணாகலில் பெரிய வீடொன்றுள்ளது. அது பழைய வீடு அதில் ஒரு பகுதியை நாம் புனரமைத்து எமது தொழிலுக்காக பயன்படுத்துகிறோம். எங்களுக்கு காணிகள் இருப்பதாகக் கூறுகின்றனர். 10, 15, 20 பேர்ச்சில் சிறு சிறு துண்டு காணிகள் சில எங்களுக்கு இருக்கின்றன. நானும் ஒரு மருத்துவர், அவரும் மருத்துவர். அதனைத்தவிர அவர் வாகனங்கள் மீது பிரியம் கொண்டவர். இதனால் வாகனங்களை வாங்கி, விற்பதுண்டு. அதிலும் அவர் வருமானம் பெறுகிறார். இவற்றை சேமித்து, எங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துவருகிறோம். ஆனால் இவர்கள் கூறுவதைப்போல அதிசொகுசுவாய்ந்த கோடீஸ்வரர்கள் இல்லை. அவ்வாறு கூறுபவர்கள் குருணாகல் வந்து எமது வீட்டைப் பார்க்க முடியும். அந்த வீட்டைப் பார்த்தாலே உண்மை புரிந்துவிடும். என்று கூறினார்.

உங்களின் கணவரின் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் உள்ளது என்றால் அவர் இதில் இருந்து மீண்டு வந்த பின்னர் குருணாகல் பகுதியில் தொடர்ந்து வசிக்கும் எதிர்பார்ப்புள்ளதா? என்ன செய்வதாக உத்தேசம் என்ற கேள்விக்கு... என்ன செய்வது என்று தெரியவில்லை என்ற பதிலே வந்தது. பிள்ளைகளின் கல்வி இடைநடுவில் நிற்கிறது. மூத்த மகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற ஒரு தாயின் வருத்தம் அவரின் வார்த்தைகளில் தெரிந்தது.

'' மீண்டும் குருணாகல் சென்று பணியாற்ற முடியும் என்று நம்பவில்லை. காரணம், நாங்கள் அங்கே வந்தால் எங்களைக் கொல்ல வேண்டும், தாக்க வேண்டும் என்று சிலர் இனவாத கோசங்களை எழுப்புகின்றனர். பிள்ளைகள் கல்வி கற்பதில் எவ்வித சிக்கல்களும் இருக்காது. பாடசாலைகளில் ஏனைய பிள்ளைகளும், ஆசிரியர்கள் அவர்களை அரவணைத்துக் கொள்வார்கள். ஆனால் பாடசாலை விட்டு வீட்டிற்கு வரும் வரையிலும், வீட்டில் இருந்து பாடசாலை செல்லும் வரையிலும் என்ன நடக்கும் என்பதை நினைத்துப்பார்க்க முடியாது. முதலில் கணவரை இந்தப் பொய்யான குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் மனநிலை பாதிக்காது பார்த்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் எதிர்காலம் குறித்து சிந்திக்கலாம் என நினைக்கிறேன். தற்போது அதுகுறித்து நினைத்துப்பார்க்க முடியாதிருக்கிறது.'' என்று கூறினார்.

அவரிடம் புகைப்படங்களை எடுப்பதற்கு அனுமதி கேட்டபோது, தற்போதுள்ள நிலைமையில், நான்தான் மருத்துவரின் மனைவி என தெரிந்தால், வெளியே நடமாடுவதில்கூட சிக்கல் வரலாம்.'' என்று கூற நாமும் அவரது முக அடையாளங்கள் தெரியாத வகையில் சில புகைப்படங்களை மட்டும் எடுத்துக் கொண்டோம்.

போலியான தகவல்களை வெளியிடுவதும், போலித் தகவல்களை பகிர்வதும், இனிக்க இனிக்க இனவாதம் பேசுவதும் அவரை கெமரா முன்னிலையில் பேசுவதற்கு முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. அவரது துல்லியமாக குரலை பதிவுசெய்துகொள்ள முடியாத நிலை இருந்தது.

இனவாத பிரசாரங்களும், போலித் தகவல்களும், அவற்றை தெரியாமல் பகிர்வதும் எமக்குத் தெரியாத பல சேதங்களையும், அழிவுகளையும் ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் நல்லதொரு உதாரணமாகும்.

தமிழ், முஸ்லிம், சிங்களம் என பிரிவினைகளையும், வேற்றுமைகளையும் ஏற்படுத்தி, அனைத்தையும் இனவாதக் கண்களோடு நோக்குவது எமக்குள் இருக்கும் மனிதாபிமானத்தை முற்றாக கொன்றுவிடக்கூடும்.

அவற்றை ஆரம்பத்தில் தவிர்க்க மறுத்ததால், மறந்ததால்தான் 30 வருட கொடிய போரால் பல உயிர்களை காவுகொடுக்க நேரிட்டது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது என்பதையும் இந்த இடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

Comment (0) Hits: 103

பயமின்றி பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்புங்கள்- இராணுவ தளபதி பதி

senanayaka

நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ,தமது பிள்ளைகளை பயமின்றி பாடசாலைக்கு அனுப்புமாறும் இராணுவத்தளபதி மஹேஷ் சேனநாயக பெற்றோரிடம் கேட்டுக்கொள்கிறார்.

இராணுவத்தளபதி ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் மேலும் தெரியவருவதாவது,

துரதிஷ்டமான பயங்கரவாத  தாக்குதலால், இலங்கை மக்கள் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ளார்கள். தாக்குதலுக்கு பிறகு அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களின் வரவு மிகக்குறைந்து காணப்பட்டது .  அச்சமின்றி இயல்பு  வாழ்க்கையை நடாத்துவதற்கு ,பொலீஸ் மற்றும் முப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஆகவே இப்பொழுது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் பிள்ளைகளை பயமின்றி பாடசாலைக்கு அனுப்புமாறும் கேட்டுள்ளார்.

s.m

 

 

Comment (0) Hits: 87

கொச்சிக்கடை தேவாலய பெயர் பலகையில் குண்டுதாரியின் பெயரா?

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் 21/4 நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பலகையொன்று பொறிக்கப்பட்டுள்ளது.

குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் தேவாலயம் முழுமையாக புனரமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நேற்று ஜூன் 12ஆம் திகதி முதல் அனுமதி வழங்கப்பட்டது.

இதன்போது தேவாலயத்தில் கொல்லப்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொகமட் ரிஸ்வான் என்ற முஸ்லிம் பெயர் ஒன்றும் இருக்கிறது. இது குண்டுத் தாக்குதலை நடத்தியவரின் பெயர் என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.

எனினும், அது குண்டுத் தாக்குதல் நடத்தியவரிரன் பெயர் அல்ல என்று தேவாலய நிர்வாகம் அறிவித்துள்ளது. இது 15 வயதுடைய குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட முஸ்லிம் சிறுவனின் பெயர் எனவும் தேவாயலம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், அந்தோனியார் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தியவர் மொகமட் ரிஸ்வான் அல்ல எனவும் அலாவூதீன் அகமட் முவாப் என்ற நபரே குண்டுத் தாக்குதலை நடத்தியவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Name List

Comment (0) Hits: 155

பூஜித மற்றும் ஹேமசிரிக்கு எதிராக விசாரணை ஆரம்பம்

Hemasiri Fernando 2222

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பந்தமாக, கிடைத்த உளவுத்தகவல்களை செயற்படுத்த தவறியமைக்காக முன்னால் பாதுகாப்பு செயளாலர் ஹேமசிரி பெர்ணாண்டோ, மற்றும் பொலிஸ்மாஅதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கெதிராக குற்றவியல் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி,குற்றப்புலனாய்வு அதிபர் ஜெ.டீ.டி.ஜயசிங்க தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் இந்த குழுவினருக்கு ஆலோசனை வழங்குவதற்கு, அட்டோனி ஜென்ரல் தப்புல.டீ.லிவேரா நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.THNAKFILES SRI LANKA POLICE ATTACKS RESIGNATION 1111111

Comment (0) Hits: 69

ரணில் மைத்திரி கூட்டணி : நாடாளுமன்றத்தைக் கலைக்க முஸ்தீபு

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலையைக் கருத்திற்கொண்டு விரைவில் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் கலந்துரையாடியுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது என த லீடர் என்ற சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மகிந்த - ரணில் ஆகியோர் சமகால அரசியல் குறித்து கலந்துரையாடியுள்ளனர். தொலைபேசி ஊடாக இந்தக் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளமையும், ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்காக அரசாங்கம் யோசனையொன்றை முன்வைத்தால், இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது பிரமருக்கு வாக்குறுதியளித்துள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பின்னர், நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு, நான்கரை வருடங்கள் வரை ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டுமாயின், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 142

சீன உளவுத்துறைக்கு இலங்கை முன்னாள் புலனாய்வு அதிகாரி பணியாற்றுகிறாரா?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சவின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான ஓய்வுபெற்ற தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் கபில ஹெந்தாவிதாரனவிற்கும், சீனாவிற்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக கொழும்பு ரெலிகிராப் செய்தித் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவிற்கு இலங்கையின் உளவுத் தகவல்களை கபில ஹெந்தாவிதாரன வழங்கி வருவதாகவும், இதற்கான ஒலிப் பதிவு ஆதாரங்கள் இருப்பதாகவும் அந்த செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து கொழும்பு ரெலிகிராப் செய்தித் தளம் வெளியிடப்பட்ட செய்தியில் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைப் பார்க்கலாம்.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரன, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய நிலையில், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். எனினும், 2006ஆம் ஆண்டு அந்நாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சவினால் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அப்போது நடந்த வெள்ளை வேன் கடத்தல், ஊடகவியலாளர் பிரகீத் காணாமல் போகச் செய்யப்பட்டமை, லசந்த விக்ரமசிங்க கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட பல சம்பவங்கள் குறித்து கபில ஹெந்தாவிதாரன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

கபில ஹெந்தாவிதாரன பதவி நீக்கப்பட்ட பின்னர் 2015ஆம் ஆண்டு கொழும்பு சங்கிரீல்லா நட்சத்திர விடுதியின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக அதிக சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டார். இராணுவத் தலைமையகம் அமைந்திருந்த பிரதேசத்தை சங்கிரில்லா விடுதி அமைப்பதற்கு ராஜபக்ச அரசாங்கத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் இந்தச் சம்பவம் நடந்தது.

21/4 தீவிரவாத தாக்குதல்களின் பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட முன்னணி நாடுகள் தமது நிபுணர்களை அனுப்பி இலங்கையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க முன்வந்துள்ளது. இலங்கை புதிதாக எதிர்கொண்டுள்ள உலக பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்காக உலக நாடுகள் இவ்வாறு உதவ முன்வந்துள்ளன. சங்கிரில்லா நட்சத்திர விடுதியில் அமெரிக்க அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க நிபுணர்கள் சங்கிரில்லா விடுதிக்கு சென்று விசாரணைகளை நடத்தியுள்ளதுடன், உலக பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கான உதவிகளை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

கோதாபய ராஜபக்சவின் வலது கரமாக செயற்படும் கபில ஹெந்தாவிதாரன, சீன புலனாய்வுப் பிரிவின் முகவராகவும் இலங்கையில் செயற்படுவதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. கபில ஹெந்தாவிதாரன பேசிய ஒலிநாடாக்கள் இருக்கின்றன. இதில் இலங்கை - அமெரிக்க ஆகிய நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் குறித்த தகவல்களும் பகிரப்பட்டுள்ளன.

எனினும், இலங்கை எதிர்கொண்டுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவின் பங்களிப்பு என்ன என்பதை அறிந்துகொள்வதில் கபில ஹெந்தாவிதாரன அதிக ஆர்வம் காட்டுகிறார். எனினும், சங்கிரீல்லா நட்சத்திர விடுதியின் பாதுகாப்பில் அதிக அக்கறை அவருக்கு இல்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சங்கிரீல்லா விடுதி மீதான தாக்குதலில் அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. எனினும், சீன புலனாய்வுத் துறையினருக்கும் அவர்களிது அரசியல் செயற்பாடுகளுமே கபில ஹெந்தாவிதாரனவிற்கு இந்தத் தருணத்தில் முக்கியமானதாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

''அமெரிக்க - இலங்கை உறவுகள் எவ்வாறு உள்ள என்பது குறித்து மதிப்பிட வேண்டும்'' என்று சீன ஒருவருடன் கபில ஹெந்தாவிதாரன நடத்திய உரையாடலின் ஒலிநாடா இருக்கிறது.

''சில அபிவிருத்திப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் எதிர்க்கட்சி, கூட்டு எதிர்க்கட்சி ஆகியவற்றுக்கும் தொடர்பிருக்கிறது. இது வெறுக்கத்தக்க நெருக்கத்தை ஏற்படுத்தும்'' என்று அவர் எச்சரிக்கிறார். அமெரிக்கா, இலங்கையை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் இருப்பதால் அதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இதற்கமைய விமான நிலையங்களையோ, துறைமுகங்களையோ அவர்களுக்கு வழங்கக்கூடும்.'' ''இதுகுறித்து நான் அவதானித்து வருகிறேன்.'' என்று அவர் வாக்குறுதியளித்துள்ளார். ''அரசாங்கம் இவற்றை மறுத்துவிடும். ஆனால், திரைமறைவில் என்ன திட்டங்கள் இருக்கின்றன என்பது தெரியாது'' என்று அவர் கூறிய ஒலிப்பதிவில் உள்ளது.

''இதுகுறித்து கவனம் செலுத்துமாறு உங்களின் இராஜதந்திர உறவுகளுக்கும் கூறிவையுங்கள்'' என முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரி சீன அதிகாரிக்கு கூறுகிறார். அத்துடன், இலங்கை வெளிவிவகார அமைச்சிலும் இதுகுறித்து பேசி, தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு அவர் கூறுகிறார்.

அத்துடன், கபில ஹெந்தாவிதாரனவிற்கு எவ்வாறு பணம் வழங்குவது என்பது குறித்து பேசிப்பட்ட ஒலிநாடாவும் இருப்பதாக கொழும்பு டெலிகிராப் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. கபில ஹெந்தாவிதாரனவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கு பணம் வழங்குவது குறித்து இதில் பேசப்பட்டுள்ளது.

இலங்கையின் உயர்மட்ட உளவு அதிகாரியொருவர், ளெிநாட்டு சக்தியுடன் எவ்வளவு காலமாக தொடர்பில் இருக்கிறார் என்பதையும், சீனாவில் இரந்து அவர் எவ்வாறான உத்தரவுகளைப் பெற்றுக்கொண்டு, இந்த புலனாய்வுத் தகவல்களை வழங்கி வருகிறார் என்பதையும் கண்டறிய முடியாதுள்ளது. எனினும், பொதுபல சேனா மற்றும் ராஜபக்ச குடும்பத்தாரின் தேர்தல் பிரசாரம் ஆகியவற்றுக்கு சீனாவிலிருந்து பண உதவிகள் பெறப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

தற்போது தேசிய பாதுகாப்பு தளத்தில் கோதாபய ராஜபக்ச தலைமையேற்றுள்ளார். எனினும், இவ்வாறான நபர்கள் உண்மைகளை எவ்வளவு தூரம் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள் என்பதே சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. கோதாபய ராஜபக்சவின் நம்பிக்கைக்குரிய முன்னாள் புலனாய்வுத் தலைமை அதிகாரி, அவரது பிரசாரத்திலும், அரசாங்கத்திலும் எவ்வாறான முக்கியத்துவம் பெறுவார் என்பதே கேள்வியாகியுள்ளது. இலங்கையின் அமெரிக்க வேட்பாளர், தனது சீன உளவாளியை அவரது வியத்மக இயக்கத்தில் இருந்தும், தேர்தல் பிரசாரத்தில் இருந்தும் விலக்குவாரா? என்பதைப் பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

என்று கொழும்பு ரெலிகிராம் செய்தித் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு ரெலிகிராப்பில் வெளிவந்த செய்தி :

Exclusive: Gota’s Intelligence Czar Caught Red Handed As Chinese Mole

Comment (0) Hits: 75

சந்திப்பு இரத்து : அமைச்சரவையும் நடக்காது : சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்

ஜனதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையில் இன்றிரவு ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் நடக்கவிருந்த சந்திப்பு இரத்தானது.

நாளை அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதா? இல்லை? என்பதை இன்று பேசி தீர்மானிக்கவிருந்த நிலையில், குறித்த பேச்சுவார்த்தை இரத்தாகியுள்ளது. இதனால் நாளைய தினம் அமைச்சரவையும் நடக்காது எனத் தெரியவருகிறது.

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை இரத்துச் செய்யாவிடின் வரும் காலங்களில் அமைச்சரவை கூட்டத்தைப் புறக்கணிப்பதாக மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே கூறியிருந்தார்.

அமைச்சரவையின் தலைவரான ஜனாதிபதி இல்லாமல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவது சட்டத்துக்கு முரணானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 08 ஆம் திகதி சனிக்கிழமை அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 21/4 தாக்குதல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுகுழுவின் பணிகளில் தமக்கு உடன்பாடில்லை எனக் கூறியிருந்தார். தன்னை இலக்கு வைத்து அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் அதனை இரத்துச் செய்ய வேண்டும் என மறைமுகமாகக் கூறியிருந்தார். அதுவரை தான் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை எனவும் அறிவித்திருந்தார்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அமைச்சர் மலிக் சமரவிக்கிரம உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி - பிரதமர் ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர்.

தீர்மானமிக்க கூட்டம் ஒன்று இன்று இரவு 8.00 மணிக்கு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது. எனினும், இறுதி நேரத்தில் அந்தச் சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது. அதனால் அமைச்சரவையும் நாளை நடைபெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் காலம் நெருங்கிவரும் நிலையில், அரச தலைவர்களின் இந்த அரசியல் மோதலினால் தென் இலங்கை அரசியல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

Comment (0) Hits: 83

முத்திரை குத்த முயற்சிக்க வேண்டாம்!

''முத்திரைக் குத்தச் சென்று, நீங்கள் முத்திரைக் குத்திக் கொள்ள வேண்டாம்.'' என நிதியமைச்சின் ஊடகப் பிரிவு சிங்கள மொழியில் வெளியிட்டுள்ள பொதுநல அறிவிப்பொன்று, தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரக்கப்பட்டு வருகிறது.

''நீங்கள் குத்தும் முத்திரை, இரத்தக் கறைகளை ஏற்படுத்தலாம். சரியான முத்திரையைப் (வார்த்தைகளைப்) பயன்படுத்துங்கள்'' என்று அந்த அறிவிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள மேலுமொரு செய்தியில், 21/4 தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களின், துன்பங்களையும், துயரங்களையும் குறுகிய அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்த யாரும் முயற்சிக்க் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீர பொதுத்தளத்தில் அனைத்துத் தரப்பினரிடமும் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். இந்த மிலேச்சத்தனமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பழியை, ஜனநாயகத்தை நம்பியுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் மக்கள் மீதும் சுமத்துவதும், அவர்களை சந்தேகக் கண்கொண்டு பார்த்து, அவர்கள் மீது பயங்கரவாதிகள் என்ற முத்திரையை குத்திவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

எமது மனித நேயத்தையும், நாம் கற்றுவந்த தர்மத்தையும் வெளிப்படுத்துவதற்கு இந்த இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Lebal 1

Text Bobm

Comment (0) Hits: 106

அரபு மொழி பெயர்ப்பலகைகளை  நீக்க சுற்று நிருபம் வெளியானது

சில பிரதேசங்களில் உள்ள அரபு மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்ப்பலகைகளை உடனடியாக நீக்குவதற்கான சுற்று நிருபம் தற்பொழுது வெளியிடப்பட்டிருப்பதாகத் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக இவ்வாறான பெயர்ப்பலகைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டார். பொது கொள்கையின் அடிப்படையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளுக்கு மேலதிகமாக சந்தர்ப்பம் இல்லை.

ஏனைய மொழிகளில் பெயர்ப்பலகைகளைக் காட்சிப்படுத்துவதற்கு அது தொடர்பான விஷேட அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.(அ)

-தகவல் திணைக்களம்-

 

Comment (0) Hits: 70

புர்கா , நிகாப் தடை : ஹிஜாப் அணிய தடையில்லை!

பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையில் முகம் மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டதாக வர்த்தமானி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் குறித்த வர்த்தமானியின் ஷரத்துக்களின்படி,

  • முழு முகம் என்பது காதுகளையும் சேர்த்து தான் என குறிப்பிடப்பட்டது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. இதனை அடுத்து ஹிஜாப் அணிய தடையில்லை.
  •  முழு முகத்தை மூடும் நிகாப் தான் தடை என அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

BurqaM

Comment (0) Hits: 108

எந்த நேரத்திலும் ஒன்று சேர 3000 பேர் பயிற்சியுடன் தயார் என்கிறார் ஞானசார தேரர்

வஹாப் வாத முகவர்களால் இலங்கையில் 3000 இற்கும் அதிகமான இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன், குறுகிய அறிவுறுத்தலின்படி ஒன்று சேரக் கூடிய நிலையில் அவர்கள் உள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராஜகிரியவில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

சவூதி அரேபியாவின் புலனாய்வுப் பிரிவின் வஹாப் வாத முகவர்களாக செயற்படும் தெஹிவளையை தலைமையகமாக கொண்ட தனியார் பல்கலைக்கழகத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட வேண்டும்.

தெஹிவளை, கண்டி, குருணாகல் என பல பகுதிகளில் கிளைகளைக் கொண்ட இந்த தனியார் பல்கலைக்கழகம் 200 முஸ்லிம் இளைஞர்களை பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட மூன்று நாடுகளில் உள்ள அடிப்படைவாத அமைப்புகளுடன் செயற்படுவதற்காக அனுப்பி வைத்திருக்கிறது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவருக்கு மத்திய கிழக்கு நாடுகளில் ஹோட்டல்கள் இருப்பதுடன், இவருக்கு இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி ஒன்றும் இருக்கிறது.

சவூதி அரேபியாவின் புலனாய்வுப் பிரிவின் வஹாப் வாத முகவர்களாக இந்தத் தனியார் பல்கலைக்கழகம் செயற்பட்டுள்ளது. கல்வி என்ற பேர்வையில் பல முஸ்லிம் இளைஞர்கள் அடிப்படைவாத சிந்தனையுடன் வஹாப் வாதம் புகட்டப்பட்டு பல உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 200 இளைஞர்களும் போலியான பெயர்களில் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக என்னிடம் தகவல்கள் உள்ளன.

அத்துடன், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு உதவிய பொறியியலாளர்கள் இருவரும் காத்தான்குடியிலிருந்து அழைத்து வரப்பட்டு குறித்த பல்கலைக்கழத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

வஹாப் வாத முகவர்களால் இலங்கையில் 3000 இற்கும் அதிகமான இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. குறுகிய அறிவுறுத்தலில் ஒன்று சேரக்கூடிய நிலையில் அவர்கள் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் குறித்த தனியார் பல்கலைக்கழகத்தின் உரிமையாரை அரசாங்கம் உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

Comment (0) Hits: 63

21/4 தாக்குதலும் கோதாபயவின் இன,மதவாத அரசியல் நகர்வும்

21/4 அன்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலையடுத்து கோதாபய ராஜபக்ச தனது அரசியல் நகர்வுகளை துரிதப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

குறித்த தாக்குதல் நடத்தப்பட்ட மறுதினமே, தான் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கப் போவதாக அறிவித்தார். அத்துடன், அமெரிக்க பிராஜா உரிமை தனக்கு இல்லை எனவும், தான் இலங்கை பிரஜை மட்டுமே என்றும் கோதாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

நாட்டில் பாதுகாப்பு இல்லையெனவும், நாட்டிற்கு கடும்போக்குத் தலைவர் ஒருவர் தேவை எனவும் ராஜபக்ச தரப்பினரின் அறிக்கைகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

எனினும், ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கையில் முதன்முறை தாக்குதல் நடத்தினாலும், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் மீதும் இவ்வாறான தாக்குதல்களை நடத்தியுள்ளன. இலங்கையில் உள்ள சில அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை மூளைச் சலவை செய்து, இந்தத் தாக்குதலுக்கு, அவர்களின் உதவிகளைப் பெற்றுக்கொண்டதால், குறித்த இளைஞர்களும் தற்போது பெரும் துன்ப, துயரங்களை சந்திக்க நேரிட்டுள்ளது.

சர்வதேச ரீதியாக இருக்கும் இந்தப் பிரச்சினை தற்போது இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது. எனினும், முஸ்லிம் மக்கள் இவ்வாறான செயற்பாடுகளுக்கு கடுமையான எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளியிட்டுள்ளனர். அம்பாறை, கல்முனை பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் இராணுவத்தினருக்கு வழங்கிய தகவல்களை அடுத்தே அங்கு பெரும் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்பின்னர் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் முக்கியமாக முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்புடன் இவ்வாறான தாக்குதல்களை முறியடிக்க முடியும் என பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட அனைவரும் நம்புகின்றனர்.

எனினும், இனங்களுக்கிடையில் சந்தேகத்தையும், குரோதத்தையும் ஏற்படுத்தி, அரசியல் முன்நகர்வுகளை ராஜபக்ச தரப்பினர் எடுத்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த குரோத, இனவாத, மதவாத சிந்தனைகளை விதித்து, இவ்வாறான அரசியல் நகர்வுகளுக்கு சில ஊடகங்களும் துணை போவதை அவதானிக்க முடிவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, இவ்வாறு இனவாத, மதவாத அடிப்படையில் அரசியல் செய்ய முயற்சிப்போர் குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comment (0) Hits: 81

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற ஊழியரை பாராளமன்றத்துக்கு அழைத்து வந்து விசாரணை

SL Parliament xxxxxxx

தவ்வீத் ஜமாத் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு  கொண்டருந்த விடயம் சம்பந்தமாக, கைது செய்யப்பட்ட பாராளுமன்ற  ஊழியர்  நவ்ஷட் ஜமால்டீன், பாராளுமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரை கைதுசெய்து விசாரணை தொடரும் நிலையில் சீ.ஐ.டி யினரால் பராளுமன்றத்துக்கு அழைத்து வருவதாக  குறிப்பிடப்படுகிறது.

பாராளுமன்றத்திலிருந்து  பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவரை கைது செய்து விசாரணை நடைப்பெற்றுவருவதோடு, அவர் பாவித்த கனனி மற்றும் இதர ஆவணங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்றத்துக்கு அழைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

Comment (0) Hits: 65

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்

21/4 தாக்குதலின் பின்னர் பொய்ப் பிரசாரங்களையும், வதந்திகளையும் தடுப்பதற்காக இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டன.

Comment (0) Hits: 78