V2025

வெளிநாடு

பட்டினியால் தவிக்கும் சிம்பாபே மக்கள்

சிம்பாபேயில் சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவின்றி அல்லலுறுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அங்கு தொடரும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை மற்றும் அண்மையில் ஏற்பட்ட இடாய் சூராவளி போன்ற இயற்கை அழிவுகள் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

பயர்நிலங்கள் அனைத்தும் வறண்டு காணப்படுவதால் உணவு பொருட்களின் விலை மலைப்போல் உயர்ந்துள்ளதாகவும் ஐ.நாவின் உலக உணவு ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் சிம்பாவே டொலரின் பெறுமதி வெகுவாக குறைந்துள்ளதால் பணவீக்கமும் கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில்; வறட்சி காரணமாக அங்கு அவசரகாலநிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி எமர்சன் மனங்கக்குவா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சிம்பாபேயில் ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்க 294 டொலர்கள் தேவை என ஐ.நாவின் உலக உணவு ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

 

Comment (0) Hits: 295

அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கின்றது

கிழக்கு ஜெருசலேம் பகுதியில் இஸ்ரேலிய அரசாங்கம் மேற்கொள்ளும் அகழ்வுப் பணிகளை அமெரிக்க ராஜதந்திரிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

பலஸ்தீனர்கள் எதிர்காலத்தில் தங்களது மாநிலமாக பிரகடனம் செய்துள்ள பகுதியிலேயே இஸ்ரேலிய அதிகாரிகள் இவ்வாறு அகழ்வுப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

யூதர்களின் மரபுரிமைப் பகுதியில் இவ்வாறு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1967ம் ஆண்டு இடம்பெற்ற மத்திய கிழக்கு போரின் போது இஸ்ரேலினால் கைப்பற்றப்பட்ட தமது பகுதியின் ஆதிக்கத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள இஸ்ரேல் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக பலஸ்தீனம் குற்றம் சுமத்தியுள்ளது.

இஸ்ரேலின் இந்த முயற்சிகளுக்கு அமெரிக்காவும் உதவி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசு தலைவர் டொனால்ட் ட்றாம்ப் மற்றும் அதன் அரசாங்கம் இஸ்ரேலுக்கு எந்த அளவிற்கு பக்கச்சார்பாக செயற்பட்டு வருகின்றது என்பது அதன் ஒவ்வொரு செயற்பாடுகளின் மூலமும் அம்பலமாகின்றது என பலஸ்தீனம் தெரிவித்துள்ளது.

Comment (0) Hits: 187

இந்தியாவில் புலிகள் அதிகரித்துவிட்டன

உலகளவில் புலிகள் வாழ்வதற்கான சிறந்த சூழல் மண்டலத்தை இந்தியா கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச புலிகள் தினத்தையொட்டி இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். அப்போது உரையாற்றிய அவர், வனப் பாதுகாப்பின் அம்சங்களில் ஒன்றாக புலிகள் உள்ளதாக குறிப்பிட்டார்.

புலி இனத்தை அழிவில் இருந்து காக்க மத்திய அரசு முழு முயற்சியுடன் செயல்பட்டு வருவதாக கூறிய பிரதமர், இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டை ஒப்பிடுகையில், கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் புலிகள் எண்ணிக்கை 33 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறினார். கடந்த 2014ல் இரண்டாயிரத்து 226 ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை, கடந்தாண்டு இரண்டாயிரத்து 967 ஆக அதிகரித்திருந்தது அனைவருக்கு மகிழ்ச்சியான விஷயம் என்றும் கூறினார்.

 

Comment (0) Hits: 250

6 ஆண்டுகளின் பின்னர் கனேடிய கழிவுகளை அனுப்பி வைத்த பிலிப்பைன்ஸ்

கழிவுகள் அடங்கிய கப்பல் பிலிப்பைன்ஸிலிருந்து கனடாவை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மீள் சுழற்சி நோக்கில் கனடாவினால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு தொகுதி கழிவுகளை பிலிப்பைன்ஸ் அண்மையில் திருப்பி அனுப்பி வைத்துள்ளது.

பிரிட்டிஸ் கொலம்பியாவின் மேற்கு கரையோரப் பகுதியின் Tsawwassen துறைமுகத்திற்கு இந்த கழிவுகள் அடங்கிய கப்பல் வந்தடைந்துள்ளது.

சுமார் 70 கொள்கலன்களில் கழிவுகள் மற்றும் இலத்திரனியல் கழிவுகள் பிலிப்பைன்ஸிலிருந்து கனடாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டில் கனேடிய நிறுவனமொன்று இந்த கழிவுகளை மீள்சுழற்சி செய்யும் நோக்கில் பிலிப்பைன்ஸிற்கு கப்பல் மூலம் அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 164

பிரித்தானியாவின் புதிய அமைச்சரவை நியமனம்

பிரித்தானியாவின் புதிய அமைச்சரவை இன்று(வியாழக்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளது.

31 பேரைக் கொண்ட அமைச்சரவையில் டொமினிக் ராப் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், ப்ரித்தி படேல் உள்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், முன்னாள் பிரதமர் தெரேசா மேயின் அமைச்சரவையில் இருந்த சாஜிட் ஜாவிட் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, பிரக்ஸிட் நடவடிக்கைக்கான குழுவையும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நியமித்துள்ளார்.

இதன்படி, ஸ்டீபன் பார்க்லே பிரக்ஸிட் அமைச்சராகவும் மைக்கல் கோவ் ஒப்பந்தமற்ற பிரஸிட் திட்டமிடல் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில் முக்கிய இடத்தினைப் பிடித்துள்ளவர்கள் விபரம் வருமாறு,

Stephen Barclay: Brexit secretary (retains post), Michael Gove: Chancellor of the Duchy of Lancaster and no-deal Brexit planning, Ben Wallace: Defence secretary, Liz Truss: International trade secretary, Matt Hancock: Health secretary (retains post), Gavin Williamson: Education secretary, Nicky Morgan: Culture secretary, Andrea Leadsom: Business secretary, Amber Rudd: Work and pensions secretary (retains post), Jacob Rees-Mogg: Leader of the Commons

Comment (0) Hits: 277

ஏதிலிகளுக்கு ஆதரவளித்த பெண் மாலுமி கைது

ஏதிலிகள் கொண்ட கப்பலை செலுத்திய பெண் மாலுமியை இத்தாலிய காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஏதிலிகளைக் கொண்ட கப்பல் இத்தாலியின் லாம்பிடுசா தீவு துறைமுகத்தை அண்மையில் சென்றடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

டச்சு கொடியைத் தாங்கிய சீ வொட்ச்3 என்ற கப்பலே இவ்வாறு இத்தாலியை சென்றடைந்திருந்தது.

கடதலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆபிரிக்க ஏதிலிகளை மீட்ட இந்தக் கப்பல் இரண்டு வாரங்களாக சர்வதேச கடற்பரப்பில் இருந்தாகவும் இத்தாலி அல்லது ஐரோப்பிய ஒன்றியம் எவ்வித அழைப்பினைவும் விடுக்காத காரணத்தினால் இத்தாலி நோக்கி கப்பல் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குறித்த பெண் மாலுமிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அனுமதியின்றி கப்பலை துறைமுகத்தில் தரித்து நிறுத்தியதாகவே குறித்த மாலுமி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், இந்தக் கப்பலில் சுமார் நாற்பது ஆபிரிக்க ஏதிலிக் கோரிக்கையாளர்கள் இருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Comment (0) Hits: 173

பாலியல் வன்கொடுமைகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா?

பிபிசியின் Arab world பிரிவு இராக்கில் நடத்திய ஒரு ஆய்வில், எதிர்பாராத ஒரு முடிவு கிடைத்தது - அங்கு பெண்களைவிட அதிக எண்ணிக்கையிலான ஆண்களே வார்த்தைகள் அளவிலும், உடலியல் ரீதியாகவும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என தெரிய வந்துள்ளது. இது உண்மைதானா?

சமி-க்கு வயது 13

15 முதல் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் மூன்று பேர், சமியை சுவருடன் சேர்த்து பிடித்தபோது அவர் கழிவறையில் இருந்தார். சமியின் உடலின் பாகங்களை அவர்கள் தொட்டு, இழுக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் சமி பயந்து போனார். அவருடைய உடல் அதிர்ச்சியில் செயல் இழந்து போனது. திடீரென ஒரு குரல் கேட்டது.

``நான் அலறத் தொடங்கினேன்.''

இந்தக் கூச்சல் மற்ற மாணவர்களுக்கு கேட்க, அவர்கள் தலைமை ஆசிரியரை அழைத்தனர். அந்த மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால் என்ன காரணத்துக்காக அவர்கள் நீக்கப்பட்டார்கள் என்றோ, அவர்கள் என்ன செய்தார்கள் என்றோ அவர்களுடைய பெற்றோருக்குத் தெரிவிக்கப்படவில்லை.

சமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பின்னர் தலைமை ஆசிரியரின் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டார். அப்போது நடந்த விஷயங்கள் மீண்டும் அவரை தாக்குவது போல இருந்தது. ஒப்புதலின் பேரில் நடந்த பாலுறவு என்று அதை பள்ளிக்கூட நிர்வாகம் கருதும் என்றும், நல்ல வேளையாக அவரை பள்ளியில் இருந்து நீக்கவில்லை என்றும் நிர்வாகம் கூறியிருக்கிறது. பள்ளியில் தொடர்ந்து இருப்பதற்கு சமிக்கு `இன்னொரு வாய்ப்பு' வழங்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

``அந்த மாணவர்களுடன் உடன்பாடு கொண்டு நான் செயல்பட்டதைப் போல எல்லோரும் நினைத்தார்கள்'' என்று கூறுகிறார் சமி.

இதனால் அதிர்ச்சியடைந்து, மிரட்டப்பட்ட நிலையில், பெற்றோரிடம் இதைச் சொல்ல வேண்டாம் என முடிவெடுத்தார். தனக்குள் அதை வைத்துக் கொண்டார். மாதக் கணக்கில் யாருடனும் அதிகம் பேசாமல் இருந்தார்.

சமி பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளானது இதுவே முதல்முறை.

சமி-க்கு வயது 15

அது 2007. ஓராண்டுக்கு முன்பு அவருடைய தந்தை இறந்துவிட்டார். சம்பாதிக்கக்கூடிய நபரை இழந்துவிட்டதால், குடும்பத்துக்குப் பெரிய பின்னடைவு ஏற்பட்டது.

இராக்கின் பாக்தாத் நகரில் இருந்து 100 கிலோ மீட்டர் தெற்கில் உள்ள செழிப்பான பாபிலோன் மாகாணத்தில் வளர்ந்த சமி, குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்தார். காலை 7 மணிக்கு எழுந்து பள்ளிக்கூடம் சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு திரும்புவார். நன்றாக படித்துவிட்டு, பிறகு சகோதரர் அல்லது சகோதரியுடன் நேரத்தை செலவிடுவார். மாலையில் தாத்தா பாட்டி வீட்டுக்குச் சென்று, இரவு அங்கேயே சாப்பிடுவார். அவ்வப்போது அவருடைய தந்தை வேலை பார்க்கும் இனிப்பு கடையில் உதவி செய்வார். அதற்கு ஊதியமாக டோனட்டுகள் (இனிப்பு) கிடைக்கும்.

 

ஆனால் அவருடைய தந்தை மரணம் அடைந்த நிலையில், அவர் வெளியில் சென்று வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உள்ளூர் சந்தையில் ஒரு கடையில் அவருக்கு வேலை கிடைத்தது.

அப்போதுதான் அது மறுபடியும் நடந்தது.

கடை முதலாளி அளவுக்கு அதிகமாக தன் மீது கவனம் செலுத்துவது சமிக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியது.

``அவர் என் மீது அளவுகடந்த அக்கறை காட்டினார்'' என்று சமி கூறினார்.

பிறகு ஒரு நாள், தாங்கள் தனியாக இருந்தபோது அந்த முதலாளி சமியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து, விரல்களால் விளையாடத் தொடங்கினார். அருகில் இருந்த கண்ணாடி கோப்பையைப் பிடித்துக் கொண்டு சமி காதல் இருப்பதைப் போல நடித்தார். பின்னர் அந்த முதலாளியின் தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

அந்தப் பகுதி வியாபாரிகளிடம் முதலாளி என்ன சொல்லியிருப்பார் என்று சமிக்கு தெரியவில்லை. ஆனால் வேறொரு வேலை கிடைக்க ஓராண்டு ஆனது.

சமி -க்கு வயது 16

அவருடைய தாயாரும், உடன் பிறந்தவர்களும் வெளியில் சென்றிருந்தார்கள். அப்போது உறவுமுறை மூத்த சகோதரர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். சமிக்கு அருகில் அமர்ந்து, தனது செல்போனை எடுத்து, சமிக்கு எதிரிலேயே ஆபாசப் படங்களைப் பார்க்கத் தொடங்கினார். திடீரென சமியை கட்டிப்பிடித்து, பலத்தைக் காட்டி அடக்கி, அடித்து பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்.

அதுபற்றி வெளியில் பேச முடியாத அளவுக்கு அந்த கொடூரமான தாக்குதல் மிகந்த வலியைத் தருவதாக இருந்தது. அதுபற்றி அதிகம் நினைத்தால், பதற்றமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

குழந்தைப் பருவத்தில் சமி வளர்ந்த வீட்டில் அவரால் மேலும் இருக்க முடியவில்லை.

``அந்த வீட்டை விட்டு வெளியேறி, அங்கிருந்து வெளியில் செல்வதற்கு குடும்பத்தினரை நான் சமாதானப்படுத்த வேண்டி இருந்தது. உறவினர்கள் மற்றும் அருகில் வசித்த நண்பர்களுடன் உறவை துண்டித்துக் கொண்டோம்'' என்று சமி கூறுகிறார்.

குடும்பம் முழுவதும் பாக்தாத் நகருக்குச் செல்ல, அங்கு அனைவருக்கும் வேலை கிடைத்தது.

ஏற்கனவே நடந்த தாக்குதல்களின் நினைவுகள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தன. அதனால் காதல் உறவுகளில் இருந்து சமி தள்ளியே இருந்தார். பிறகு நகரில் கிடைத்த புதிய நண்பர்கள் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று இனியும் அவர் விரும்பவில்லை.

அவருக்கான சிறிய குழுவில் இருக்கும் நண்பர்களிடம் தனக்கு நடந்த அனைத்தையும் சொல்லி இருக்கிறார் சமி. இதற்கான எதிர்வினை எதிர்பாராததாக இருந்தது. இந்த அனுபவம் தனக்கு மட்டும் ஏற்பட்டது இல்லை என்று சமி அறிந்து கொண்டார்.

தாங்களும்கூட பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக, அந்த நண்பர்கள் குழுவில் இருந்த இளம் வயது ஆண்கள் கூறியுள்ளனர்.

பிபிசி அரபிக் செய்திகள் பிரிவு 10 நாடுகளிலும், பாலத்தீன எல்லைகளிலும் நடத்திய ஆய்வில், இரண்டு நாடுகளில் - அதாவது துனீசியா மற்றும் இராக்கில் - பெண்களைவிட அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் வார்த்தை அளவிலும், உடல் ரீதியாகவும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என தெரிய வந்தது.

துனீசியாவில் இது சிறிய அளவாக, வெறும் ஒரு சதவீதமாக இருந்தது. ஆனால் இராக்கில் மிதமிஞ்சி இருந்தது. அங்கு 39 சதவீத ஆண்கள், வார்த்தை அளவிலும், உடல் ரீதியாகவும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானதாகத் தெரிவித்தனர். இது போன்ற கொடுமைகளுக்கு ஆளாகும் இராக் பெண்களின் அளவு 33 சதவீதம் என்ற அளவில் இருந்தது.

இராக்கில் 17 சதவீத பெண்கள் உடல் ரீதியாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிலையில், 20 சதவீத ஆண்கள் இந்தக் கொடுமைக்கு ஆளானதாகத் தெரிவித்தனர்.

குடும்ப வன்முறையில் சிக்கியதாகவும் அதிக அளவிலான இராக்கிய ஆண்கள் கூறினர்.

நாட்டில் பெண்களின் உரிமை மோசமான நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இந்த முடிவுகள் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளன. அந்த நாட்டு அரசியல் சட்டம் சரத் 41ன்படி, மனைவியை கணவன் அடிப்பது கூட சட்டவிரோதம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை நடத்திய அரபு பாரோமீட்டர் அமைப்பில் இணை ஆராய்ச்சியாளராக இருக்கும் டாக்டர் காத்ரின் தாமஸ், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் வெளியில் சொல்லாமல் அமைதியாகவும் இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்.

``வன்கொடுமை என்பது போன்ற, உணர்வுபூர்வமான கேள்விகள் கேட்பது, சில எச்சரிக்கைகளுடன் கேட்கப்பட வேண்டும்'' என்று அவர் சொல்கிறார்.

``அதுபற்றிப் பேசுவது தங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதாலோ அல்லது அது தங்களுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாகவோ அவர்கள் இதை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம்.''

``ஆண்களுடன் ஒப்பிடும்போது வன்கொடுமைகளை வெளியில் சொல்ல பெண்கள் தயங்குவார்கள்.''

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த இராக்கிய மூத்த ஆராய்ச்சியாளர் பெல்கிஸ் வில்லே இதை ஒப்புக்கொள்கிறார்.

``குடும்ப வன்முறை அல்லது பாலியல் துன்புறுத்தல் என தங்களுடைய அனுபவத்தை வகைப்படுத்தவோ அல்லது வன்கொடுமை பற்றி பேசவோ பெண்கள் தயங்குவார்கள். இந்த வார்த்தைகளே கூட அவர்களுக்கு பரிச்சயமற்றவையாக இருக்கும்'' என்று அவர் கூறுகிறார்.

இராக் மருத்துவமனைகளில் இந்தப் போக்கைக் காண முடிந்தது என்கிறார் அவர். மருத்துவமனையில் எப்போதும் பாதுகாப்பு அலுவலர்கள் இருக்க வேண்டும் என சட்டம் உள்ளது. தனக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதாக ஒரு பெண் கூறினால், அதை அவர்களிடம் டாக்டர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் சட்டம் கூறுகிறது.

``துன்புறுத்தல் செய்தவர்களை காப்பாற்றுவதற்காக பெரும்பாலும் பெண்கள் பொய் சொல்வார்கள். குறிப்பாக அது தங்களுக்குத் தெரிந்தவர்களாக இருந்தால் அவ்வாறு செய்வார்கள். இதுகுறித்து குற்றவியல் விசாரணை நடந்தால் தங்களுக்கு தண்டனை கிடைத்துவிடுமோ என்று அவர்கள் அஞ்சுவார்கள்'' என்றும் அவர் தெரிவித்தார்.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பு இராக்கில் ஆண் ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கையர்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி அறிந்துள்ளது. ஆனால் இவை பல சமயங்களில் காவல் துறையினரிடம் புகாராக வருவதில்லை.

``இராக்கில் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும், திருநம்பிளுக்கும் இராக்கில் இதுபோன்ற அனுபவங்கள் தொடரவே செய்கின்றன. `பெண் தன்மை' உள்ளதைப் போல இருப்பவர்கள் பெரும்பாலும் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகிறார்கள்'' என்று ஸ்வீடனை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்றை நிறுவிய அமீர் அஷோவ்ர் கூறுகிறார். அந்த அமைப்பு இராக்கில் ஓரினச் சேர்க்கையாளர்களின் அனுபவங்கள் குறித்து அக்கறை செலுத்தி வருகிறது.

``இதுபற்றி ஆண்கள் பேசுவதை சமூக சூழ்நிலைகள் அனுமதிப்பது இல்லை என்பதால், இதுபோன்ற குற்றங்கள் அதிகமாக வெளியில் தெரிவிக்கப்படுவது இல்லை. மேலும் இதுபோன்ற விஷயங்களை வெளியில் சொன்னால், பாதிக்கப்பட்ட நபரை ஆண் ஓரின சேர்க்கையாளர் என்று கூறிவிடுவார்கள். அது அதிக வன்கொடுமை மற்றும் புறக்கணிப்புக்கு ஆளாக்கிவிடும்'' என்று அமீர் அஷோவ்ர் கூறுகிறார்.

சமியும் இதே கருத்தை கூறுகிறார். ஆண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்படுவது சட்டத்துக்கு எதிரானது என்றாலும், காவல் துறையும், சமூகமும், பாதிக்கப்பட்ட ஆண்கள் மீது சிறிதளவு தான் அனுதாபம் காட்டும் என்று அவர் கூறினார்.

``ஆண் ஒருவர் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதாக காவல் துறையில் புகார் அளித்தால், அவர்கள் உங்களைப் பார்த்து சிரிக்கக்கூடும்'' என்கிறார் அவர்.

பிபிசி சர்வே

அல்ஜீரியா, எகிப்து, இராக், ஜோர்டான், குவைத், லெபனான், மொராக்கோ, சூடான், துனிஷியா, ஏமன் மற்றும் பாலத்தீனிய பிராந்தியங்கள் என மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவில் உள்ள 10 நாடுகளில் 25000க்கும் அதிகமானவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

இதில் கேள்விகள் கேட்கப்பட்ட நபர்களின் எண்ணிக்க, நாடுகள் மற்றும் ஆழமான கேள்விகள் என அனைத்து வித்த்திலும் அந்த பிராந்தியத்தின் மிகப்பெரிய சர்வே இது.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வு நிறுவனமான அராப் பாரோமீட்டரால் இந்த சர்வே எடுக்கப்பட்டது.

13 வயதாக இருந்தபோது பள்ளிக்கூடத்தில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை அவர் நினைவில் வைத்திருக்கிறார். பாதிப்புக்கு உள்ளானவராக இருந்தபோதிலும், அப்போது தன் மீது குற்றஞ்சாட்டப்பட்டதை மறக்கவில்லை. இதுபோல இப்போதும் நடக்கலாம் என்கிறார் அவர்.

``பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதாக காவல் துறையில் நான் புகார் செய்தால் அவர்கள் என்னை பாதிக்கப்பட்டவராகப் பார்க்காமல், சிறையில் போடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த சம்பவத்தில் எனக்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் கருதலாம். அது ஓரின சேர்க்கையாகப் பார்க்கப்படலாம் - அது சட்டவிரோதமானது'' என்று அவர் கூறினார்.

``எனக்கு ஆதரவாக சட்டம் உள்ளது. ஆனால் அதை அமல்படுத்த வேண்டியவர்கள் எனக்கு ஆதரவாக இல்லை'' என்கிறார் அவர்.

``அனைத்து குடிமக்களுக்கும் எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன. பாலியல் அத்துமீறல் நடந்திருப்பதாக, பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறினால், அதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்'' என்று இராக் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார். மனித உரிமைகள் பற்றி புதிய புரிதல்கள் ஏற்பட்டதை அடுத்து 2003ல் நாட்டில் புதிய அணுகுமுறை அமல் செய்யப்பட்டது. இதுபோன்ற வழக்குகளை கையாள்வதற்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

சமிக்கு இப்போது வயது 21

இப்போது வாழ்க்கை நன்றாக இருக்கிறது. பாக்தாத் நகரில் வாழ்வதை அவர் விரும்புகிறார். பெரிய சர்வதேச நிறுவனம் ஒன்றில் சமிக்கு வேலை கிடைத்திருக்கிறது. அவருடைய கடந்த காலத்தை அறிந்த, அவருக்கு ஆதரவான நண்பர்கள் குழு இருக்கிறது. பிபிசிக்கு தன்னுடைய கதையை சொல்வதன் மூலம், இதுபற்றிய அனுபவங்களை சொல்ல மற்றவர்களை ஊக்குவிக்க முயல்வதாக அவர் கூறினார்.

ஆனால் கடந்த காலம் என்பது மூடி வைத்த புத்தகம் இல்லை. இப்போதும் யாரையேனும் காதலிக்க முடியும் என்று அவருக்கு தோன்றவில்லை,

தாம் மாறிவிட்ட நிலையில், இராக் சமூகம் மாறிவிட்ட நிலையில், அநேகமாக ஒருநாள் தனக்கான துணை கிடைக்கும் என்று அவர் கூறுகிறார். அவருக்கு 35 வயதாகும் போது அதுபற்றி மறுபடியும் அவர் நினைத்துப் பார்ப்பார்.

Comment (0) Hits: 327

தலிபான்களின் தாக்குதலில் 26 துணை இராணுவக்குழு உறுப்பினர்கள் பலி

தலிபான்கள், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு ஆதரவான துணை இராணுவக் குழுவின் 26 உறுப்பினர்களை கொலை செய்துள்ளனர்.

தலிபான்களுக்கும், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வட ஆப்கானிஸ்தான் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பதினெட்டு ஆண்டுகளாக நீடித்து வரும் யுத்தத்திற்கு தீர்வு காணும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

28 துணை இராணுவக் குழு உறுப்பினர்களைக் கொன்றுள்ளதாகவும், 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் தலிபான்கள் அதிகாரபூர்வமாக இந்த தாக்குதல் தொடர்பில் அறிவித்துள்ளனர்.

Comment (0) Hits: 195

தோல்வியில் மிளிர்ந்த போராளி ஜடேஜா

2019 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி கடந்த மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டபோது ஓவ்வொரு வீரரும் எந்த தகுதியில் தேர்வு செய்யப்பட்டனர் என்ற விவாதம் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் மத்தியில் எழுந்தது.

மற்ற வீரர்களின் தேர்வு குறித்து வெவ்வேறு கருத்துகள், மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், ஒரு வீரரின் தேர்வு குறித்து ஒருமித்த கருத்தே நிலவியது. அது ரவீந்திர ஜடேஜாவின் தேர்வுதான்.

தனது சிறப்பான ஃபீல்டிங்கில் குறைந்தது 25-30 ரன்களையாவது அவர் தடுத்து விடுவார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகியவை அவரின் கூடுதல் பங்களிப்பு என்பது ஜடேஜா பற்றி ரசிகர்களின் கணிப்பாக இருந்தது.

பேக்வர்ட் பாயிண்ட் (Backward point) நிலையில் ஃபீல்ட் செய்யும் ஜடேஜா லாவகமாக பாய்ந்து பவுண்டரிக்கு செல்லும் பந்தை தடுக்கும் காட்சி ரசிகர்களுக்கு வாடிக்கையான ஒன்றாக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது.

ஆனால், ஆல்ரவுண்டராக கருதப்படும் ஜடேஜாவின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு எப்படிபட்டது?

2009-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஜடேஜா, இதுவரை 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 41 டெஸ்ட் போட்டிகளிலும், 40 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

பொதுவாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான வீரராக ரவீந்திர ஜடேஜா கருதப்பட்டாலும், அவர் டெஸ்ட் போட்டிகள் மற்றும் ரஞ்சி போன்ற உள்ளூர் முதல்தர போட்டிகளில் நீண்ட இன்னிங்ஸ் விளையாடியவர்தான்.

தனது 23 வயதுக்குள் முதல்தர போட்டிகளில் 3 முச்சதங்களை எடுத்து சாதனை படைத்தவர் ஜடேஜா.

உள்ளூர் முதல்தர போட்டிகள் பிரிவில், செளராஷ்டிரா அணிக்காக விளையாடி, கடந்த 2011-இல், ஒடிசா அணிக்கு எதிராக 375 பந்துகளில் 314 ரன்கள் எடுத்து அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த ஜடேஜா, தனது இரண்டாவது முச்சதத்தை குஜராத் அணிக்கு எதிராக 2012-இல் எடுத்தார்.

அதே ஆண்டில் ரயில்வே அணிக்கு எதிராக அவர் மேலும் ஓர் முச்சதத்தை எடுத்தார்.

இதுவரை ஒருநாள் போட்டிகளில் எந்த சதமும் எடுக்காத நிலையில், தான் விளையாடிய 41 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதத்தை ஜடேஜா எடுத்துள்ளார்.

2019 உலகக்கோப்பையில் ஜடேஜாவின் பங்கு

ஆல்ரவுண்டரான ரவீந்திரா ஜடேஜா நடப்பு உலகக்கோப்பை தொடரில் தொடக்க போட்டியில் அணியில் இடம்பெறவில்லை. குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகிய இரு சுழல்பந்துவீச்சாளர்களும் தங்கள் இடங்களை தக்கவைத்துக்கொள்ள பந்துவீச்சாளர்களுக்கான மற்ற இடங்களை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சென்றது.

ஆல்ரவுண்டர்களுக்கான இடத்துக்கு விஜய்ஷங்கர் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரே கருத்தில் கொள்ளப்பட்டனர்.

ஜடேஜாவை அணியில் சேர்ப்பதால் என்ன பயன்? அவர் எட்டாவதாக பேட் செய்து எடுக்கும் ரன்களை அந்த நிலையில் பேட் செய்யும் யாரும் எடுக்க முடியுமே? சிறப்பாக பந்துவீசும் சுழல்பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்க ஜடேஜா தேவைப்படுவாரா என்றெல்லாம் சமூகவலைதளங்களில் விவாதங்கள் நடந்தன.

இதனிடையே ஓர் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் யுவேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவுக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட வேண்டுமா எனும் கேள்விக்கு ''நான் அரைகுறையான வீரர்களுக்கு ரசிகனல்ல. ஜடேஜா டெஸ்ட் போட்டியில் முழு பௌலர். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது சுழற்பந்து வீச்சாளரை தேர்வு செய்யவே விரும்புவேன்,'' என சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதற்கு ஜடேஜா ட்விட்டரில் சஞ்சய் மஞ்சரேக்கர் மீது பதிலடி தந்தார்.

''நான் உங்களைவிட இரு மடங்கு போட்டிகள் விளையாடியிருக்கிறேன். இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கிறேன். சாதித்தவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நான் உங்கள் வார்த்தை மலத்தை போதுமானளவு கேட்டுவிட்டேன்,'' என ரவீந்திர ஜடேஜா ட்வீட் செய்தார்.

இது சமூகவைலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் நியூசீலாந்து அணிக்கு எதிராக நடந்த அரையிறுதி போட்டியில் ஜடேஜாவின் பேட்டிங் சமூகவலைதளங்களில் மிகவும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரையிறுதி போட்டியில் ரவீந்தர ஜடேஜாவின் பங்களிப்பு குறித்து கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர் ரகுராமன் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''ஜடேஜா சச்சின், திராவிட் போன்ற நுணுக்கமான பேட்ஸ்மேன் அல்ல. விராட் கோலி, ரோகித் சர்மா போன்று அதிரடி வீரருமல்ல. ஆனால் அவருக்கென்று ஒரு தனி பாணியுள்ளது'' என்று கூறினார்.

''களத்தில் இருக்கும் ஓவ்வொரு நிமிடமும், அது பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என்று எந்த அம்சமாக இருந்தாலும், ஒரு லைவ்வயர் (Livewire) போல துடிப்பாக இருப்பவர் ஜடேஜா''

''ஒருநாள் போட்டிகள் மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிகளிலும் ஜடேஜா இந்தியாவின் வெற்றிகளுக்கு காரணமாக இருந்துள்ளார். இந்திய ஆடுகளங்களில் அஸ்வினோடு இணைந்து அவர் எடுத்த விக்கெட்டுகள், குவித்த ரன்கள் மட்டுமல்ல இங்கிலாந்தில் 2018-இல் நடந்த டெஸ்ட் தொடரிலும் அவரின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது'' என்று அவர் மேலும் கூறினார்.

''அரையிறுதி போட்டியில் ஜடேஜாவின் இன்னிங்க்ஸ் வரும் ஆண்டுகளில் மிகவும் பேசப்படும் ஓர் அம்சமாக இருக்கும். தோல்வியுற்ற போதிலும் இந்த இன்னிங்க்ஸை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வெகு நாட்கள் நினைவில் கொள்வர்'' என்றார்.

''முன்பு ராபின்சிங் அணியில் நம்பத்தகுந்த வீரராக இருந்தார். தற்போது ஜடேஜா அந்த நிலையில் உள்ளார். அவரை அணியின் கேப்டன் சரியான முறையில் பயன்படுத்தினால் அணிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்'' என்று ரகுராமன் மேலும் குறிப்பிட்டார்.

ஜடேஜாவின் போராட்ட கதை


தனது பதின்மவயதில் ஒரு விபத்தில் தனது தாயை பறிகொடுத்த ஜடேஜா, அந்த சூழலை கடக்க மிகவும் சிரமப்பட்டதாக பலமுறைகள் பேட்டிகளில் நினைவுகூர்ந்துள்ளார்.

அந்த காலகட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை தொடர்வதே சந்தேகமாக இருந்தது. கிரிக்கெட்டை விட்டுவிடுவது என்ற முடிவுக்கே வந்துவிட்டேன் என்று அவர் குறிப்பிட்டார்.

கடுமையாக போராடியே அவர் செளராஷ்டிரா அணியில் இடம்பெற்றார். ஏராளமான போட்டிகளுக்கு மத்தியில் அவர் இந்திய அணியில் இடம்பெற்றது தளராத போராட்டம் மற்றும் தன்னம்பிக்கையாலும்தான்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த அரையிறுதி போட்டியிலும் அப்படி ஒரு போராட்டத்தை முன்னெடுத்த ஜடேஜாதான், அரை இறுதியில் கண்டிப்பாக வெற்றி என்று விளையாடிய நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு அச்சறுத்தலாக இருந்தார்.

77 ரன்களில் ஜடேஜா அவர் ஆட்டமிழந்தவுடன் நியூசிலாந்து அணிக்கு வெற்றி எளிதானது. 19 ரன்களில் வென்ற நியூசிலாந்துக்கு ஜடேஜாவின் விக்கெட்டை வீழ்த்துவதே ஒரே நோக்கமாக இருந்தது.

போராளி ஜடேஜா

சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமாக உள்ள ஜடேஜாவை நகைச்சுவையாக சிஎஸ்கே அணியின் சகவீரர்களான தோனி, ரெய்னா, அஸ்வின் போன்றோர் `சர்` ரவீந்திர ஜடேஜா என குறிப்பிட அது ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகிவிட்டது.

ஜட்டு, சர் ரவீந்திர ஜடேஜா, ராக்ஸ்டார் என பல செல்லப்பெயர்களில் ஜடேஜா அறியப்படுகிறார்.

''ஓர் அணியில் நட்சத்திர வீரர்கள் அல்லது சாதனையாளர்கள் பலர் இருக்கலாம். அவர்களை வீழ்த்துவதைவிட கடுமையாக போராடும் ஒரு வீரரை ஆட்டமிழக்க செய்வதே எனக்கு முக்கியம். ஏனெனில் போராளிகள் எப்போதும் ஆபத்தானவர்கள்'' என்று பாகிஸ்தான் அணியின் வசீம் அக்ரம் ஒருமுறை கூறியிருந்தார்.

அப்படி ஒரு போராளியாக மிளிர்ந்த ரவீந்திர ஜடேஜா, ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் ஒரே நம்பிக்கையாக 20019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இருந்தார். போட்டிகளில் வெற்றி தோல்விகள் இயல்பு. ஆனால் ஒவ்வொரு தோல்வியிலும் ஒரு பாடம் இருக்கும், ஒரு புதிய நம்பிக்கை பிறக்கும்.

புதன்கிழமையன்று நடந்த போட்டியில், அந்த நம்பிக்கையை இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் ரவீந்திர ஜடேஜா விதைத்துள்ளார்.

- நன்றி பிபிசி தமிழ்

Comment (0) Hits: 343

சீன, கனேடிய தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு

சீன அரச தலைவர் ஸீ ஜின்பிங்குடன், கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்பொழுது ஜப்பானில் நடைபெற்று வரும் ஜீ20 நாடுகள் மாநாட்டில் சீன அரச தலைவரும், கனேடிய பிரதமரும் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முரண்பாட்டு நிலைமைகள் நீடித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, கனடாவின் உயர் அதிகாரிகளுடன் சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடாத்த அதிக நாட்டம் காட்டவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையில் நிலவி வரும் ராஜதந்திர முரண்பாட்டு நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்காவின் உதவியை கனடா பெரிதும் எதிர்பார்த்துள்ளது.

அமெரிக்காவின் கோரிக்கைக்கு அமைய ஹ_வாவே நிறுவனத்தின் நிதி நிறைவேற்று அதிகாரியை கனடா கைது செய்ததனைத் தொடர்ந்து சீனாவுடனான முரண்பாட்டு நிலைமை ஆரம்பித்திருந்தது.

இதேவேளை, சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையில் நிலவி வரும் பதற்ற நிலைமையானது தற்காலிகமானது என கனடாவிற்கான சீனத் தூதுவர் டுர ளூயலந தெரிவித்துள்ளார்.

பதவிக் காலம் முடிவடைந்து பிரியாவிடை பெற்றுச் செல்லும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பலமான மலைகளினால் கூட ஆற்றின் நீர் கடலை சென்றடைவதனை தடுக்க முடியாது எனவும், அதே போன்று இரு நாடுகளுக்கும் இடையிலான விரிசல் நிலைமை தற்காலிகமானது எனவும் தெரிவித்துள்ளார்.

வரலாற்றுக் காலம் முதல் சீனாவிற்கும் கனடாவிற்கும் நிலவி வரும் நட்புறவினை தடுக்க முடியாது எனவும், அந்த நட்பு நீடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 171

இன்று மழை பெய்தால் போட்டிக்கு என்ன நடக்கும் - 7 கேள்வி பதில்

இந்தியா நியூசிலாந்து இடையேயான அரை இறுதிப் போட்டி நேற்று மழையால் கைவிடப்பட்டுள்ளது. ஆனால் இன்று ஆட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

India 2

1. எப்போது தொடங்கும்?
பிரிட்டன் நேரப்படி காலை 10.30 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி பிற்பகல் மூன்று மணிக்கு போட்டி துவங்கும்.

2. எந்த ஓவர், எந்த பந்தில் இருந்து ஆட்டம் துவங்கும்?
நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்று 47-வது ஓவரின் இரண்டாவது பந்தை புவனேஷ்வர் குமார் வீசுவார். நியூசிலாந்து எஞ்சிய 23 பந்துகளையும் சந்தித்து 50 ஓவர்களையும் நிறைவு செய்யும்.

அதன் பின்னர் இந்திய அணி சேசிங் செய்யும்.

3. புதன்கிழமை மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா?
பிபிசி வெதர் பக்கம் இன்றும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறுகிறது.

4. டக் வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் கணக்கீடு நாளை(புதன்கிழமை) கடைபிடிக்கப்படுமா?
மழையால் ஆட்டம் பாதிக்கப்படவில்லை எனில் டக் வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் முறைக்கு வேலையில்லை.

ஆனால் இன்று (புதன்கிழமை) மழை பெய்யும் பட்சத்தில் எந்தவொரு கட்டத்திலும் டக் வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் முறை கணக்கீடு முக்கிய பங்கு வகிக்கும்.

இன்றும் மழை பெய்து நியூசிலாந்து ஆட்டத்தை துவக்க முடியவில்லை எனில் இந்தியா 20 ஓவர்கள் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 148 ரன்கள் எடுக்க வேண்டியதிருக்கும்.

India 1

5.இன்றும் (புதன்கிழமை) ஆட்டம் கைவிடப்பட்டால்?

நாளை (புதன்கிழமை) இந்திய அணி 20 ஓவர்கள் பேட்டிங் செய்ய இயலாமல் போனால் ஆட்டம் கைவிடப்படும்.

அப்படி ஒரு சூழல் உருவானால் ரவுண்ட் ராபின் சுற்றில் நியூசிலாந்தை விட இந்தியா அதிக புள்ளிகள் எடுத்திருப்பதால் நேரடியாக இறுதி போட்டிக்குத் தகுதி பெறும்.

6.இன்றைய போட்டியில் (புதன்கிழமை) புது வீரர்கள் களமிறங்க முடியுமா?

இல்லை. நேற்றைய போட்டியில் இரு அணியிலும் களமிறங்கிய வீரர்களே இன்றும் விளையாட வேண்டும். பேட்டிங் அல்லது பௌலிங்கில் மாற்று வீரர் பங்கெடுக்க முடியாது.

7.நுழைவுச் சீட்டு வாங்கிய ரசிகர்கள் என்ன செய்வது?
நேற்று ரசிகர்கள் மைதானத்தில் போட்டியை காண நுழைவுச் சீட்டு வாங்கியிருந்தால் அதனை இன்றும் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த நுழைவுச் சீட்டை இன்று விளையாட்டரங்கில் நுழைவதற்கு முன் பரிசோதகரிடம் காண்பிக்க வேண்டியதிருக்கும்.

ரசிகர்கள் நுழைவுச் சீட்டை விற்க முடியாது.

இதுவரை ஆட்டத்தில் நடந்தது1
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

முதல் பந்திலேயே ரிவ்யூவை இழந்தது இந்தியா. முதல் இரண்டு ஓவர்கள் மெய்டன் ஆனது. மூன்றாவது ஓவரில் ரன் கணக்கைத் துவக்கியது நியூசிலாந்து.

நான்காவது ஓவரில் கப்டில் விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா.

அதன்பின்னர் ஹென்றி நிக்கோல்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் இணைந்து பொறுமையாக விளையாடினர்.

ஜடேஜா பந்தில் நிக்கோல்ஸ் வீழ்ந்தார்.

கேன் வில்லியம்சன் - ராஸ் டெய்லர் அணி மிடில் ஓவர்களில் ரன் ரேட்டை உயர்த்தவில்லை.

கேன் வில்லியம்சன் அரை சதமடித்து 67 ரன்களில் அவுட் ஆனார்.

நீஷம், கிராந்தோம் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.

ராஸ் டெய்லர் 67 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருக்கிறது.

இந்திய அணி தரப்பில் ஐந்து பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 34 ரன்கள் மட்டும் கொடுத்தார். சாஹலின் 10 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்தனர் நியூசிலாந்து பேட்ஸ்மென்கள்.

- நன்றி பிபிசி தமிழ்

Comment (0) Hits: 653

ஹொங்கொங்கில் மீண்டும் போராட்டம்

ஹொங்கொங்கில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்த தரப்பினர் மீளவும், அரசாங்கத்திற்கு எதிராக குழுமியுள்ளனர்.

ஹொங்கொங்கில் அமைந்துள்ள அரசாங்க நிறுவனங்களின் எதிரில் கறுப்பு ஆடை அணிந்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுமியுள்ளனர்.

சந்தேக நபர்களை சீனாவிற்கு நாடு கடத்தி அங்கு விசாரணைகளை நடத்தும் சட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு மில்லியன் கணக்கான மக்களை அணி திரட்டி ஹொங்கொங்கில் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.

இதன் ஓர் அங்கமாகவே இன்றைய தினம் சுமார் ஆயிரம் மாணவர்கள் அரசாங்க நிறுவனங்களுக்கு எதிரில் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த சர்ச்சைக்குரிய சட்ட மூலம் அமுல்படுத்தப்படுவதனை இடைநிறுத்திக் கொள்வதாக ஏற்கனவே ஹொங்கொங்கின் தலைவர் அறிவித்துள்ளார்.

அரசாங்கம் மக்களின் விருப்பு வெறுப்புக்களை புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Comment (0) Hits: 185

இந்தியாவிற்கு 50 வீத வெற்றி வாய்ப்பு : இத நாம சொல்ல இல்ல

அரை இறுதிப் போட்டியில் இன்று இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இதுவரை ஆறு முறை உலகக்கோப்பையில் அரை இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி மூன்று முறை வென்றுள்ளது. மூன்று முறை தோல்வியடைந்துள்ளது.

எந்தெந்த அரை இறுதிப் போட்டிகளில் என்ன முடிவு கிடைத்தது?

1983 - இந்தியா v இங்கிலாந்து
முடிவு - இந்தியா வெற்றி

மான்செஸ்டர் மைதானத்தில்தான் இந்திய அணி கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக அரை இறுதிப் போட்டியில் விளையாடியது.

அப்போட்டியில் தொடரை நடத்திய இங்கிலாந்தை எதிர்கொண்டது.

60 ஓவர்கள் கொண்ட அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்து 213 ரன்களை குவித்தது.

கபில்தேவ் 3 விக்கெட்டுகளையும் பின்னி மற்றும் அமர்நாத் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்திய அணி 55-வது ஓவரில் வென்றது.

கவாஸ்கர் 25 ரன்களிலும் ஸ்ரீகாந்த் 19 ரன்களிலும் ஆட்டமிழந்ததும் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. ஆனால் அமர்நாத் 92 பந்துகளை சந்தித்து 46 ரன்கள் எடுத்தார். யஷ்பால் சர்மா 115 பந்துகளில் 3 பௌண்டரி, இரண்டு சிக்ஸர்கள் விளாசி 61 ரன்கள் குவித்தார்.

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய சந்தீப் பாட்டீல் 32 பந்துகளில் 8 பௌண்டரிகள் விளாசி 51 ரன்கள் குவித்து அணியை வெற்றிபெறச் செய்தார்.

1987 - இந்தியா v இங்கிலாந்து
முடிவு - இங்கிலாந்து வெற்றி

இம்முறை போட்டியை நடத்திய இந்தியா சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது.

மும்பை வான்கடே மைதானத்தில் இப்போட்டி நடந்தது.

83-ல் ஏற்பட்ட தோல்விக்கு இங்கிலாந்து பழி தீர்த்துக்கொண்டது.

டாஸ் வென்ற இந்தியா ஃபீலடிங்கைத் தேர்ந்தெடுத்தது.

கிரகாம் கூச்சின் அபார சதத்தால் 50 ஓவர்களில் 254 ரன்கள் எடுத்து இங்கிலாந்து.

இந்திய அணி ஏழு ரன்கள் எடுத்திருந்தபோது கவாஸ்கர் அவுட் ஆனார். ஸ்ரீகாந்த் 31 ரன்களில் திருப்திப்பட்டார்.

அசாருதீன் 74 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். கபில் தேவ் 22 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார். கடைசி ஆளாக ரவி சாஸ்திரி 21 ரன்களில் அவுட் ஆனார்.

219 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்றது இந்தியா. இங்கிலாந்து அணித் தரப்பில் ஹெம்மிங்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

1996 - இலங்கை v இந்தியா
முடிவு - இந்தியா தோல்வி

இந்திய ரசிகர்கள் மறக்க வேண்டும் என நினைக்கும் போட்டி இது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் ரசிகர்கள் ஏற்படுத்திய களேபரத்தால் போட்டி பாதியில் நின்றபோது நடுவர் இலங்கை வென்றதாக அறிவித்துவிட்டார்.

டாஸ் வென்ற இந்திய அணி சேஸிங்கைத் தேர்வு செய்திருந்தது.

ஆட்டத்தின் துவக்கத்திலேயே கலுவிதரனாவை வீழ்த்தினார் ஸ்ரீநாத். பின்னர் சனத் ஜெயசூர்யாவும் நடையை காட்டினார். இலங்கை அணி ஒரு ரன்னுக்கு 2 விக்கெட்டுகள் இழந்திருந்தது.

குருசின்ஹாவும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் அரவிந்த டி சில்வா அதிரடியாக விளையாடத் துவங்கினார். பௌண்டரிகளில் பேசினார்.

47 பந்துகளில் 14 பௌண்டரி அடித்தார். 66 ரன்களில் வீழ்ந்தார். அப்போது இலங்கை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின்னர் வந்த வீரர்கள் ஓரளவு தாக்குப்பிடித்து ஆட இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 251 ரன்கள் எடுத்தது.

ஸ்ரீநாத் மூன்று விக்கெட்டுகளும் டெண்டுல்கர் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் .

அசாருதீன் தலைமையிலான இந்திய அணி சேஸிங்கைத் துவக்கியது. சித்து 3 ரன்களில் வீழ்ந்தார். அதன் பின்னர் டெண்டுல்கரும், மஞ்சரேகரும் இணைந்து சரிவை தடுத்து நிறுத்தினர்.

டெண்டுல்கர் அபாரமாக விளையாடி அரை சதமடித்தார்.

88 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து டெண்டுல்கர் அவுட் ஆன போது ஸ்கோர் 98/2. அதன் பின்னர் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

34.1 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. ரசிகர்கள் கொந்தளிக்க மைதானத்துக்குள் புட்டிகள் வீசப்பட்டன, ஸ்டேடியத்தில் இருக்கைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

அப்போது 29 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் வினோத் காம்ளி. அன்று இரவு ஏற்பட்ட அமளியில் நடுவர் மேற்கொண்டு போட்டியை நடத்த முடியாது எனக்கூறி இலங்கை வென்றதாக அறிவித்தார்.

இந்தியா 22 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்த அந்த அரை இறுதிப் போட்டி, இந்திய ரசிகர்கள் மறக்க நினைக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

2003 : இந்தியா vs கென்யா
முடிவு - இந்தியா வெற்றி

சச்சின் - கங்குலியின் சிறப்பான ஆட்டத்தில் இந்தியா எளிதாக கென்யாவை வென்றது.

டாஸ் வென்று இந்தியா பேட்டிங் செய்தது. 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது.

ஷேவாக் 33 ரன்களில் அவுட் ஆனார். சச்சின் 83 கைகள் எடுத்தார். கங்குலி அபார சதம் விளாசினார். அவர் ஐந்து பௌண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் விளாசினார்.

கென்யா அணி சேஸிங்கில் ஆரம்பத்திலேயே சொதப்பியது. 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்தது. அணித்தலைவர் டிகோலோ மட்டும் சதமடித்தார். 179 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்தது கென்யா.

ஜாகீர் கான் 9.2 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

2011: இந்தியா v பாகிஸ்தான்
முடிவு - இந்தியா வெற்றி

சச்சின் டெண்டுல்கர் மூன்றாவது முறையாக அரை இறுதிப்போட்டியில் அரை சதம் விளாசினார்.

இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே சேவாக் பந்துகளை பௌண்டரிக்கு விரட்டிக் கொண்டே இருந்தார்.

ஆறாவது ஓவரில் சேவாக் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 48.

அதற்கடுத்தது வந்த வீரர்கள் யாரும் பெரிதாக நிலைத்து நின்று விளையாடவில்லை. கம்பீர் 27, தோனி 25 ரன்கள் எடுத்தனர். கோலி 9 ரன்கள் எடுத்தார். யுவராஜ் சிங் டக் அவுட் ஆனார்.

ஒரு முனையில் டெண்டுல்கர் மட்டும் போராடினார். அதே சமயம் அவர் கொடுத்த கேட்ச்களை பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து தவறவிட்டனர்.

சச்சின் 115 பந்துகளில் 85 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆனார். அப்போது இந்தியா 41.4 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்திருந்தது.

அந்நிலையில், பந்துவீச்சாளர்களோடு இணைந்து சுரேஷ் ரெய்னா ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவரது பொறுப்பான 36 ரன்களால் இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 260 ரன்கள் எடுத்தது.

பிறகு ஆட வந்த பாகிஸ்தான் அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது. 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

சண்டிகரில் நடந்த இப்போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது இந்தியா.

சச்சின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

பஞ்சாப் மண்ணில் பாகிஸ்தானை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்த அரை இறுதிப்போட்டி இந்திய ரசிகர்கள் பலருக்கும் மறக்க முடியாத ஒன்று.

2015: இந்தியா vs ஆஸ்திரேலியா
முடிவு - இந்தியா தோல்வி

ஆஸ்திரேலியாவின் அபார ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

சிட்னியில் நடந்த போட்டியில் பின்ச் 81 ரன்கள் குவித்தார். ஸ்டீவன் ஸ்மித் 93 பந்துகளில் அபார சதமடித்தார்.

ஃபால்க்னர் 12 பந்தில் 21 ரன்களும் மிச்செல் ஜான்சன் 9 பந்துகளில் நான்கு பௌண்டரி ஒரு சிக்ஸர் உதவியுடன் 27 ரன்களும் விளாசினர்.

இந்திய அணித்தரப்பில் உமேஷ் யாதவ் மட்டும் நன்கு விக்கெட்டுகள் எடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா.

இந்திய அணி எந்தவொரு கட்டத்திலும் வெற்றிக்காக போராடவில்லை. 76 ரன் வரை விக்கெட் இழப்பின்றி விளையாடிய இந்தியா 108 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்திருந்தது.

தோனி - ரஹானே இணை இந்திய ரசிகர்களுக்கு சற்று நம்பிக்கைத் தரும் விதமாக விளையாடியது. ஆனால் ரஹானே 44 ரன்களில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.

தோனி அரை சதமடித்து தனி ஆளாகி போராடினார். இருப்பினும் 65 பந்துகளில் 65 ரன்கள் அடித்த நிலையில் அவரும் ரன் அவுட் ஆனார்.

வெறும் இரண்டு ரன்களுக்கு இந்தியா தனது கடைசி நான்கு விக்கெட்டுகளை இழந்தது. 44.2 ஓவர்கள் முடிவில் 231/6 என இருந்த ஸ்கோர், 46.5 ஓவர்கள் முடிவில் 233/10 என்றானது.

உலகக்கோப்பை ஒருநாள் தொடர்


சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலகக் கோப்பை டி20 ஆகியவற்றை ஒப்பிடும்போது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் வீதம் குறைவாகவே இருக்கிறது.

இதுவரை ஆறு முறை அரை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ள இந்தியா மூன்று முறை மட்டும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

வெற்றி வீதம் - 50 %

அரை இறுதியில் அதிக வெற்றி வீதம் வைத்திருக்கும் அணிகள்

உலகக்கோப்பை ஒருநாள் தொடரை பொருத்தவரை ஆஸ்திரேலியா அரை இறுதிப் போட்டியில் தோற்றதே இல்லை.

இதுவரை அரை இறுதியில் விளையாடிய 7 முறையும் வென்றுள்ளது.

இங்கிலாந்து 5 -ல் மூன்று முறை வென்றுள்ளது. வெற்றி வீதம் - 60%

நியூசிலாந்து அணி இந்தியாவை விட அதிக முறை அரை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது. ஆனால் ஒரு முறை மட்டுமே இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணி தான் இதுவரை அரை இறுதியில் நான்கு முறை தகுதி பெற்றும் ஒரு முறை கூட வென்றதில்லை.

வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, இலங்கை ஆகிய அணிகள் மூன்று முறை அரை இறுதியில் வென்றுள்ளன.

- நன்றி பிபிசி தமிழ்

இந்திய அணியின் துடுப்பாட்டமும், பந்துவீச்சும் பலமாக இருக்கும் நிலையில், இந்தியாவின் வெற்றிக்காக இந்திய ரசிகர்கள் பெரும் நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.

Comment (0) Hits: 522

அணுத் திட்ட உடன்படிக்கையை ஈரான் மீறுகின்றது

அணுத் திட்டம் தொடர்பிலான உடன்படிக்கையை ஈரான் மீறிச் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அனுமதி வழங்கப்பட்டுள்ள அளவை விடவும் அதிகளவான அணுச் செறிவூட்டல் நடவடிக்கைகளை ஈரான் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கண்காணிப்பாளர்களது தகவல்களின் அடிப்படையிலேயே ராஜதந்திரிகள் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஈரான் செய்து கொண்டுள்ள அணுத் திட்டம் குறித்த சர்வதேச உடன்படிக்கையில் விலகிக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச உடன்படிக்கையை ஈரான் இன்னமும் மீறவில்லை எனவும், எனினும் அதிகளவில் அணுச் செரிவூட்டல் நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comment (0) Hits: 194

தண்ணீருக்குள் போட்டோஷூட்..! - தாய்மையைக் கொண்டாடும் சமீரா

நிறைமாத வயிறு, பிகினி டிரெஸ், தண்ணீருக்குள் போட்டோஷூட்..! - தாய்மையைக் கொண்டாடும் சமீரா

நடிகை சமீரா ரெட்டி தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், தன் நிறைமாத வயிறு தெரியும்படியாக வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் லைக்ஸ் மற்றும் க்ளாப்ஸ்ஸை அள்ளி வருகின்றன.

கர்ப்பகாலத்தைக் கொண்டாடும் விதமாகவும், அதன் நினைவுகளைப் புகைப்படங்களாகப் பதிவுகளாக்கும் விதமாகவும் ரகரகமான ஆடைகள் மற்றும் ரசனையான போஸ்களில் எடுக்கப்படும் 'ப்ரெக்னன்ஸி போட்டோகிராபி' இப்போது டிரெண்ட். நடுத்தர வர்க்க பெண்கள்கூட தற்போது 'ப்ரெக்னன்ஸி போட்டோகிராபி'யில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், நடிகை சமீரா ரெட்டி தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், தன் நிறைமாத வயிறு தெரியும்படியாக வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் லைக்ஸ் மற்றும் க்ளாப்ஸ்ஸை அள்ளி வருகின்றன.

Sameera 1

வாரணம் ஆயிரம்' திரைப்படத்தில் அறிமுகமாகி புகழ்பெற்றவர் சமீரா ரெட்டி. 2014-ம் ஆண்டு தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டு, திரைத்துறையை விட்டு ஒதுங்கினார். இப்போது தன் இரண்டாவது குழந்தையைக் கருவில் சுமக்கும் சமீரா, சில வாரங்களாகவே கர்ப்பகால புகைப்படங்களில் அதிக ஆர்வம் காட்டிவந்தார். அதில் லேட்டஸ்ட்டாகத் தன்னுடைய கர்ப்பகால உடலின் புகைப்படங்களை பிகினி ஆடைகளில் #imperfectlyperfect என்ற ஹேஷ்டாக்குடன் இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார்.

'நான் என் நிறைமாத வயிற்றின் அழகை கொண்டாட விரும்புகிறேன். இந்த ஒன்பதாவது மாதம் பயம், சோர்வு உட்பட சில பாதிப்புகளும், அதே நேரம் நம் அளவும் அழகும் அதிகரிக்கக்கூடிய மாதம். என் இந்தப் புகைப்படங்களை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

Sameera 4

நம் வாழ்வில் நாம் அனைவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் இருக்கிறோம். அதற்கு ஏற்ற நமக்கான பிரத்யேக உடல் அளவுகளுடன் இருக்கிறோம். எல்லா காலகட்டங்களிலும் நம்மை, நம் உடலை நாம் நேசிக்க வேண்டும். #imperfectlyperfect' எனப் பதிவிட்டுள்ளார் சமீரா.

 

Sameera 4

2015-ல் தன் முதல் பிரசவ காலகட்டத்தில் 102 கிலோ எடையுடன் இருந்த சமீரா, கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் உடற்பயிற்சிகள் செய்து தனது பழைய எடைக்குத் திரும்பியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்போது தெரிவித்திருந்தார்.

அந்தத் தருணத்தில், 'கர்ப்பகாலத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு குழந்தைக்கானது. அதனால் அதில் கட்டுப்பாடுகள் கொள்ள முடியாது.

Sameera 4

நன்றி விகடன்

படங்கள் சமீரா ரெட்டி - face book

Comment (0) Hits: 327

அமெரிக்காவில் தேர்தல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் நெருக்கடி

அமெரிக்காவில் தேர்தல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பெரும் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்காக தேர்தல் வரைபட திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகளிறது.

ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் செயற்படக் கூடாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தல் தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பில் அரச தலைவர் டொனால்ட் ட்றாம்ப் தலைமையிலான தரப்பினர் முயற்சித்து வருகின்றனர்.

உச்ச நீதிமன்றின் இந்த தீர்ப்பானது தேர்தல் மறுசீமைப்பு பணிகளுக்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 198

வெனிசுவேலா அரசு சித்திரவதைகளில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளதாக வெனிசுவேலாவின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அரசு தலைவர் நிகலோஸ் மடுரோவிற்கு எதிரான சதிப் புரட்சியில் ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் கடற்படை கப்படன் சுயகயநட யுஉழளவய என்பவர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் ஒர் கொலை எனவும் குறித்த கடற்படை கப்டனை அதிகாரிகள் சித்திரவதைக்கு உட்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினரும், கடற்படை கப்டனின் குடும்பத்தினரும் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.

Comment (0) Hits: 242

உலகையே உலுக்கிய புகைப்படம்

நீரில் மூழ்கிய ஏதிலிகள் பற்றிய புகைப்படம் ஒன்று இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமரிக்க மெக்ஸிக்கோ எல்லைப் பகுதியில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏதிலிக் கோரிக்கையாளர் ஒருவரும் அவரது சிறிய மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மிதக்கும் காட்சியே புகைப்படமாக்கப்பட்டுள்ளது.

ஏதிலிக் கோரிக்கையாளர்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொள்வது ஏற்புடையதல்ல என பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படம் மத்திய அமெரிக்காவிலிருந்து படையெடுத்துவரும் ஏதிலிக் கோரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஏதிலிக் கோரிக்கையாளர்களின் மரணங்கள் குறித்து கவலையளிப்பதாகவும், உரிய தீர்வுத் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் பாப்பாண்டவர் தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 213